1.85 லட்ச ரூபாய் விலையை குறைத்த பலன்! டாடா பன்ச் காரின் விற்பனை 100 சதவீதத்திற்கும் மேல் உயர்வு!

இந்திய சந்தையில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் (Most Sold Car In July 2026) என்ற பெருமையை டாடா பன்ச் (Tata Punch) பெற்றுள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 21,006 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 10,446 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 10,560 டாடா பன்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா பன்ச் கார் விற்பனையில் 101.09 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Tata Punch

டாடா பன்ச் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஜனவரி 13ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

மறுபக்கம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த பிப்ரவரி 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Tata Punch Airbags

பொதுவாக ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்றால் விலை உயரவே செய்யும். ஆனால் அதற்கு மாறாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையை உயர்த்துவதற்கு பதிலாக அதிரடியாக குறைத்துள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடலின் விலையுடன் ஒப்பிடும்போது, ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 30 ஆயிரம் ரூபாயும், டாப் வேரியண்ட்டின் விலை 1.85 லட்ச ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பாஸ் (BaaS) முறையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் வாங்கினால், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகள் உடன், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மற்றும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பல்வேறு புதிய வசதிகளையும் வழங்கியுள்ளது. அத்துடன் டிசைனிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால்தான் டாடா பன்ச் காரின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் ஐசி இன்ஜின் மற்றும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வருகைதான், இந்த சிறப்பான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. அத்துடன் டாடா பன்ச் காரின் இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கை மேலும் தொடரும் எனவும் நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Friday, July 3, 2026, 23:54 [IST]
English summary
Tata punch registers 101 per cent growth in june 2026 sales
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out