டாடா நானோ மாதிரி இந்தியாவையே மிரள விட போகும் புது கார்! மாருதிக்கு இந்நேரம் ஈரக்குலையே நடுங்கியிருக்கும்!
இந்தியர்களை தற்போது எஸ்யூவி மோகம் ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி ரக கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. இதை மிகவும் சரியாக புரிந்து கொண்டு, விலை குறைவான எஸ்யூவி கார் சந்தையை, தன் கைவசம் வைத்துள்ள நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது.
டாடா பன்ச் (Tata Punch) கார்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணம். டாடா பன்ச் காரை நாங்கள் ஏன் இவ்வளவு உயர்வாக பேசுகிறோம்? என்பது, AUTO PUNDITZ தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டை (Sales Report) பார்த்தாலே உங்களுக்கு மிகவும் தெளிவாக புரிந்து விடும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,980 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,073 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 907 டாடா பன்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டாடா பன்ச் கார் விற்பனையில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars Sold In December 2025), 8வது இடத்தையும் டாடா பன்ச் தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் டாடா பன்ச் கார், 8வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
ஆனால் இங்கே ஒரு விஷயத்தை நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக ஒரு காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன் வரப்போகிறது என்றால், அதன் விற்பனை மிக கடுமையாக சரியும். புதிய வெர்ஷனை வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில், பழைய வெர்ஷனை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்குவார்கள்.
ஆனால் டாடா பன்ச் விஷயத்தில் நடப்பது வேறு விதமாக உள்ளது. அதாவது டாடா பன்ச் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வரும் ஜனவரி 13ம் தேதி (January 13) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும்.
எனவே நடப்பு 2026ம் ஆண்டில் இந்திய சந்தையில் நடக்க போகும் மிகவும் முக்கியமான கார் அறிமுகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. டாடா பன்ச் காரின் புதிய வெர்ஷன் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையிலும், பழைய வெர்ஷனை மிகப்பெரிய எண்ணிக்கை வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர்.
எனவே டாடா பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அதன் விற்பனை எண்ணிக்கை, தற்போது இருப்பதை காட்டிலும், இன்னும் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது 8வது இடத்தில் உள்ள டாடா பன்ச் கார், கூடிய விரைவிலேயே முதல் இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.75 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகிய கார்களுக்கு எல்லாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
அத்துடன் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை பெறுவதற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்கள், ஒவ்வொரு மாதமும் மற்றும் வருட இறுதியிலும், டாடா பன்ச் காரிடம் மிக கடுமையாக போட்டியிட வேண்டிய சூழலும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








