5 பேர் மட்டுமே போகக்கூடிய காராக இருந்தும் எல்லாரும் வாங்கி போடுறாங்க... என்ன காரணமாக இருக்கும்?

டாடா பன்ச் (Tata Punch), இன்றைய சூழலில் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்று. கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் பன்ச் கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக டாடா பன்ச் 2வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமீப காலமாக, டாடா மோட்டார்ஸில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காராக பன்ச் விளங்கி வருகிறது. டாடாவின் அளவில் சிறியதான மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) வகை காரான பன்ச், பல மாதங்களில் இந்தியாவிலேயே அதிக பேரால் வாங்கப்பட்ட காராக முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 2வது இடம் பன்ச்க்கு கிடைத்துள்ளது.

tata punch april sales report

முதலிடத்தை மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் டிசையர் (Dzire) பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள டிசையர் கார்களின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரத்து 580 யூனிட்கள் ஆகும். இதற்கடுத்து 2வது இடத்தில் பிடித்துள்ள டாடா பன்ச் ஆனது 19 ஆயிரத்து 107 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த 19,107 பன்ச் கார்கள் விற்பனையில் பன்ச் இவி (Punch EV) எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. கடந்த 2025ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்து 496 பன்ச் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஏப்ரலை விட இந்த ஆண்டு ஏப்ரலில் பன்ச் கார்களின் விற்பனை 52.90% அதிகரித்துள்ளது.

tata punch april sales report

அதாவது, சுமார் 6 ஆயிரத்து 611 பன்ச் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய 2026 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 870 பன்ச் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் பன்ச் கார்களின் விற்பனை எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி, 20 ஆயிரத்து 977 யூனிட்களாக பதிவாகி இருந்தது.

கடந்த மார்ச் மாதத்திலும் கார்கள் விற்பனையில் டாடா பன்ச்சை முந்தி மாருதி சுஸுகி டிசையர் முதலிடத்தை பிடித்திருத்தது. மார்ச் மாதத்தில் 21 ஆயிரத்து 224 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் லிஸ்ட்டில் முதல் இரு இடங்களை டிசையர் மற்றும் பன்ச் கார்கள் பிடித்து வருகின்றன.

ஒட்டுமொத்த கார்கள் லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்திருந்தாலும், கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி (SUV) காராக முதலிடத்தை டாடா பன்ச் பிடித்துள்ளது. இந்த அளவிற்கு பலத்தரப்பட்ட மக்களால் வாங்கப்படும் டாடா பன்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.5.65 லட்சத்தில் இருந்து ரூ.10.60 லட்சம் வரையில் உள்ளன.

ஸ்மார்ட் (Smart), பியூர் (Pure), பியூர் பிளஸ் (Pure Plus), அட்வென்ச்சர் (Adventure), அக்கம்ப்ளிஷ்டு (Accomplished) மற்றும் அக்கம்ப்ளிஷ்டு பிளஸ் (Accomplished Plus) என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் டாடா பன்ச் விற்பனை செய்யப்படுகிறது. மறுப்பக்கம், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் ஆனது ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு பிளஸ் எஸ் என்கிற ஐந்து வேரியண்ட்களில் ரூ.9.70 லட்சத்தில் இருந்து ரூ.12.60 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக டாடா பன்ச் முதலிடத்தை பிடித்து வந்தது. ஆனால், கடந்த ஒரு வருடமாக பன்ச் கார்களின் விற்பனை ஏற்றம் இறக்கமாக இருந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதற்கு கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கை தான் சாட்சியாகும்.

Article Published On: Friday, May 8, 2026, 9:45 [IST]
English summary
Tata punch suv car 2026 april sales report check all details here
மேலும்... #tata motors #suv car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+