7 பேர் உள்ளே அமர்ந்தாலும் இன்னும் இடம் கொடுக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்! தீபாவளிக்கு அறிமுகம்!

டாடா சஃபாரி இவி எலெக்ட்ரிக் கார் ஒன்று அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் 'car_pantrr' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிய 7-சீட்டர் எலெக்ட்ரிக் காராக சஃபாரி இவி அறிமுகம் செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் சஃபாரி ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதன் புதிய எலெக்ட்ரிக் வெர்சனாக சஃபாரி இவி களமிறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தற்போது பொது வெளியில் சோதனை ஓட்டத்தின் போது இந்த புதிய டாடா எலெக்ட்ரிக் கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.

tata safari ev electric car spotted

மஹிந்திராவின் எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பாக வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், அதனை தானும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்த காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்குகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டாடா நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்வதற்கு சில புதிய எலெக்ட்ரிக் கார்களை தயார் செய்து வருகிறது.

அவற்றுள், சியரா இவி மற்றும் சஃபாரி இவி கார்களும் அடங்குகின்றன. இந்த இரு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டால், அதன்பின் டாடா கார்களில் அல்ட்ராஸ் மட்டுமே எலெக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்படாத ஒரே கார் மாடலாக இருக்கும். எங்களுக்கு தெரிந்தவரையில், சஃபாரி இவி எலெக்ட்ரிக் கார் வருகிற தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

tata safari ev electric car spotted

வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய சஃபாரி இவி ஆனது பெரிதும் அதன் பெட்ரோல்/ டீசல் வெர்சனை தான் ஒத்திருக்கும். இதன்படி, சக்கரங்களுக்கான வளைவுகள் சதுர வடிவிலும், மேற்கூரையில் வழங்கப்படும் கம்பிகள் வழக்கமான டிசைனிலும் புதிய சஃபாரி இவி காரில் இருக்கும். மேலும், இந்த புதிய எலெக்ட்ரிக் காரிலும் மேற்கூரையின் பின்பக்கத்தில் ஸ்பாய்லர் வழங்கப்பட உள்ளது.

தற்போதைய சஃபாரி பெட்ரோல்/ டீசல் காரில் இல்லாமல், புதிய சஃபாரி இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட உள்ள அம்சம் என்று பார்த்தால், பக்கவாட்டு படிக்கட்டை சொல்லலாம். இதனை தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் பார்க்கலாம். மேலும், அவ்வளவு மறைப்புகளை தாண்டி பின்பக்க மல்டி-லிங்க் சஸ்பென்ஷன் செட்-அப்பும் தெரிகிறது.

டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரிலும் இவ்வாறான சஸ்பென்ஷனே வழங்கப்படுகிறது. இதனால், ஹாரியர் இவி காருக்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆக்டி.இவி+ பிளாட்ஃபாரம் தான் புதிய சஃபாரி இவி காரிலும் பயன்படுத்தப்படும். இருப்பினும், குறைவான விலையில் நிர்ணயிப்பதற்காக தற்போதைய சஃபாரி பெட்ரோல்/ டீசல் காரின் பெரும்பாலான பாகங்களை கொண்டுதான் புதிய சஃபாரி இவி உருவாக்கப்படும்.

எலெக்ட்ரிக் கார் என்பதால் மூடப்பட்ட கிரில் இந்த சஃபாரி இவி காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும். முன் மற்றும் பின்பக்க பம்பர்களின் டிசைனும் எலெக்ட்ரிக் கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக இருக்கும். சஃபாரி இவி காரின் நீளம் 4,668மிமீ, அகலம் 1,922மிமீ, உயரம் 1,795மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 2,741மிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போதைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகங்களுள் டாடா சஃபாரி இவி ஒன்றாகும். தற்போது சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட துவங்கப்பட்டுள்ளதால், இந்த காரின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கிறோம். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் சாஃப்ட்வேர் பாகங்களை இது ஹாரியர் இவி காரில் இருந்து பெற்றுவரும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Tuesday, June 2, 2026, 12:09 [IST]
English summary
Tata safari ev electric car spotted ahead of launch in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out