வரும் ஜனவரியில் அறிமுகமாகிறது டாடா சஃபாரி 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்?

இந்தியாவில் பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார்களின் தேர்வு மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மையான எஸ்யூவிகளில் ஒன்றான சஃபாரியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டாடா ஹாரியர் இவி ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் நிலையில், அதைவிட அதிக இடவசதியுடன் மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்ட சஃபாரி இவி வரும் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நடப்பு பண்டிகை காலத்திலேயே இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Tata Safari

பேட்டரி, ரேஞ்ச்

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் Acti.ev+ என்ற தளத்தை அடிப்படையாகக் கொண்டு சஃபாரி எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி தேர்வுகள் வழங்கப்படும் அதே பேட்டரி தேர்வுகள் இந்த புதிய சஃபாரி எலெக்ட்ரிக் காரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிரவும், டாப் வேரியண்ட்டுகளில் பெரிய 80 kWh பேட்டரி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாரியர் எலெக்ட்ரிக் காரின் 75 kWh பேட்டரியுடன் கூடிய ரியர் வீல் டிரைவ் (RWD) வேரியண்ட் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ ரேஞ்ச் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதே பேட்டரியுடன் வரும் ஆல் வீல் டிரைவ் (AWD) வேரியண்ட்டானது 622 கிமீ வரை முழு சார்ஜில் பயணிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சஃபாரி எலெக்ட்ரிக் கார் 7 சீட்டர் மாடல் என்பதால், ரேஞ்ச் சற்றே குறைவாக இருக்கலாம். இதற்காகத்தான் கூடுதல் திறன் வாய்ந்த 80 kWh பேட்டரி வழங்கப்படும் என்றும், இதன் ரேஞ்ச் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

ஆல் வீல் டிரைவ் தேர்வு

ஹாரியர் எலெக்ட்ரிக் காரைப் போலவே சஃபாரி EV காரிலும் ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஹாரியர் EV காரின் ரியர் வீல் டிரைவ் மாடலானது 238 எச்பி பவர் மற்றும் 315 என்எம் டார்க்கை வழங்க வல்லது. ஆல் வீல் டிரைவ் மாடலில் முன்புறத்திலும் மின் மோட்டாரும் சேர்க்கப்படும் என்பதால் அதிகபட்சமாக 504 என்எம் டார்க் திறனை வழங்க வல்லதாக இருக்கிறது. இதே அளவு செயல்திறனை டாடா சஃபாரி எலெக்ட்ரிக் காரிலும் எதிர்பார்க்கலாம்.

மலைப்பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்காக எஸ்யூவி வாங்க விரும்புபவர்களுக்கு AWD தேர்வு சிறந்ததாக இருக்கும். அதேநேரத்தில், நகரப் பயன்பாடு மற்றும் வழக்கமான குடும்பப் பயணங்களுக்கு RWD மாடல் போதுமானதாக இருக்கும்.

Also Read

இருக்கை தேர்வுகள்

சஃபாரி எலெக்ட்ரிக் காரில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு தேர்வுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புற வடிவமைப்பில் தற்போதைய டாடா சஃபாரியின் அடிப்படை தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் இருக்காது. ஆனால், எலெக்ட்ரிக் காருக்கே உரிய வகையில் பேனல்களுடன் மூடிய அமைப்புடன் முன்பக்க கிரில், காற்றுத் தடையைக் குறைக்கும் அலாய் வீல்கள், புதிய பேட்ஜ்கள் மற்றும் புதிய வண்ணத் தேர்வுகளும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

பிரீமியம் கேபின்

உட்புறத்தில் டாடா சியரா எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ள மூன்று திரைகள் கொண்ட டேஷ்போர்டு அமைப்பு சஃபாரி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதில் ஓட்டுனருக்கான டிஜிட்டல் திரை, மையப்பகுதியில் இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் முன்பக்க பயணிக்கான தனியாக ஒரு திரை ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

இதுதவிர, வென்டிலேட்டட் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் டெயில்கேட், 540 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அடாஸ் போன்ற பாதுகாப்பு மற்றும் வசதிகளும் இடம்பெறும் என்று தெரிகிறது.

எதிர்பார்க்கும் விலை?

டாடா சஃபாரி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டுகளின் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது. இந்த கார் மஹிந்திரா XEV 9S, எம்ஜி டோமஹாக் உள்ளிட்ட பெரிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டாடா சஃபாரி எலெக்ட்ரிக் காரின் வெற்றி அதன் தோற்றத்தைவிட, நடைமுறையில் அது வழங்கும் ரேஞ்ச், மூன்றாவது வரிசையில் கிடைக்கும் இடவசதி, சார்ஜிங் வேகம் மற்றும் விலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். குறிப்பாக, 80 kWh பேட்டரி தேர்வு வழங்கப்பட்டு, நல்ல ரேஞ்சுடன், சரியான விலையில் வரும்போது, முக்கிய தேர்வாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Article Published On: Thursday, October 29, 2026, 11:44 [IST]
English summary
Tata safari ev launch january 2027 price range battery features
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out