விரைவில் வருகிறது டாடா சஃபாரி 7 சீட்டர் EV... 500 கிமீ ரேஞ்ச், ஆல் வீல் டிரைவ்?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை களமிறக்க நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், எலெக்ட்ரிக் கார் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து மின்சார கார் மாடல்களை வரிசைக் கட்டி வருகிறது.

அந்த வரிசையில், தற்போது டாடா சஃபாரி எஸ்யூவியின் மின்சார வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் மாடலாக வர இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது இந்த 7 சீட்டர் சந்தையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார் அதிக வரவேற்பை பெற்று விற்பனையிலும் அசத்தி வருகிறது.

Tata Safari

(Representational Image)

எனவே, இந்த சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக டாடா சஃபாரி எஸ்யூவியின் மின்சார வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் பண்டிகை காலத்திலேயே இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

ஏற்கனவே சந்தையில் உள்ள டாடா சஃபாரியின் 5 சீட்டர் வெர்ஷனாக உள்ள டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் அதே மின்சார தொழில்நுட்ப அம்சங்களை இந்த காரிலும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது. தற்போது ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன.

இதில் 75 kWh பேட்டரி கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டில் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. மேலும், இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 627 கிமீ வரை ரேஞ்ச் தரும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. எனவே, இதே பேட்டரி பேக்குகளை சஃபாரி மின்சார மாடலிலும் பயன்படுத்தப்படலாம்.

Also Read

டாடா சஃபாரி எஸ்யூவியின் மின்சார வெர்ஷன் 500 கிமீ தூரம் வரை நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் கொண்டதாக நிச்சயம் இருக்கும் என்பதால், நீண்ட தூர பயன்பாட்டுக்கும் சிறப்பானதாக மாறும். மேலும், இது மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் கார் ஏற்கனவே 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி சந்தையில் வலுவான இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதன் 79 kWh பதிப்பில் 679 கி.மீ வரை செல்லும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.21.40 லட்சத்தில் தொடங்கி டாப் வேரியண்ட் ரூ.30.70 லட்சம் வரை செல்கிறது. இந்த கார் 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இதே விலை அடிப்படையில்தான் டாடா சஃபாரி எலெக்ட்ரிக் எஸ்யூவியும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, சஃபாரி இவி கார் ரூ.22 லட்சம் முதல் ரூ.32 லட்சம் ex-showroom விலைப் பிரிவில் வரும் என தெரிகிறது.

ஹாரியர் எலெக்ட்ரிக் கார் மூலம் டாடா ஏற்கனவே பிரிமீயம் ரக எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தியுள்ளது. அதன் அடுத்த கட்டமாக சஃபாரி EV வருவது, டாடா கார்ஸ் நிறுவனத்தின் தேர்வுகளை இன்னும் முழுமையாக்கும்.

எனினும், தற்போதே வலுவானநிலையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் சந்தையை உடைத்து தன் பக்கம் கவனத்தை ஈர்க்க டாடா கார்ஸ் நிறுவனம் விலை, சிறப்பம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

Article Published On: Friday, September 11, 2026, 11:31 [IST]
English summary
Tata safari ev launch timeline range price features expectations
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out