புக்கிங் பண்ணீட்டு டெலிவரிக்காக காத்து கிடக்கறாங்க! தேர்தல் முடிவு போல் வாடிக்கையாளர்களை ஏங்க வைத்த டாடா கார்!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இதன் டெலிவரி (Delivery) பணிகள் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்பட்டது.
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இதன் டெலிவரி (Delivery) பணிகள் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சியரா காருக்கு முன்பதிவுகளை ஏற்க தொடங்கிய முதல் நாளிலேயே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதற்கு பிறகு புதிய டாடா சியரா காருக்கான முன்பதிவுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.
எனவே குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலையில், புதிய சியரா காரின் உற்பத்தி பணிகளை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவில் தற்போது புதிய டாடா சியரா காரின் டெலிவரி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

புதிய டாடா சியரா காரில் மிகவும் சக்தி வாய்ந்த மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.
அத்துடன் 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) புதிய டாடா சியரா கொண்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், புதிய டாடா சியரா கார் வெற்றிகரமான தயாரிப்பாக மாறியுள்ளது.
இது மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலவேட், புதிய ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் கூடிய விரைவில் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார், அனேகமாக வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரியல் வேர்ல்டு டிரைவிங் ரேஞ்ச் (Real World Driving Range) சுமார் 450-500 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications