மாருதி அடி மடியிலேயே கை வைத்த டாடா! களத்திற்கு வருகிறது மைலேஜ் கிங்! ஓட்றதுக்கு பெருசா ஒன்னும் செலவு ஆகாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா சியரா (Tata Sierra). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் டாடா சியரா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்கள் ஆகும். இந்த வரிசையில் நான்காவதாக ஒரு இன்ஜின் ஆப்ஷனை சியரா காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. அது சிஎன்ஜி இன்ஜின் ஆகும்.

Tata Sierra Interior

இந்திய சாலைகளில் 'எமிஷன் டெஸ்டிங் கிட்' உடன் டாடா சியரா கார் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது டாடா சியரா காரின் சிஎன்ஜி வெர்ஷனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து ரஸ்லேன் தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் உடன் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுமே வழங்கப்படலாம்.

Tata Sierra Side Design

பொதுவாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சிஎன்ஜி கார்களில், டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்கி கொண்டிருக்கிறது.

எனவேதான் டாடா சியரா சிஎன்ஜி காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒரு இன்ஜின் உடன் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படும். அது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினா? அல்லது டர்போ பெட்ரோல் இன்ஜினா? என்பது மட்டுமே தற்போது தெரியவில்லை.

ஆனால் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களையும் நாம் எதிர்பார்க்க முடியும். அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மற்ற சிஎன்ஜி கார்களை போலவே, சியரா சிஎன்ஜி காரிலும், ட்யூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தை வழங்கும். எனவே லக்கேஜ்களை வைத்து கொள்வதற்கான பூட் ஸ்பேஸில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு லிட்டர் பெட்ரோல் உடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோ சிஎன்ஜி-யின் விலை சுமார் 10 ரூபாய் குறைவு. அத்துடன் பெட்ரோல் மூலம் இயங்கும் கார்கள் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்கள் ஒரு கிலோவிற்கு சுமார் 7-8 கிலோ மீட்டர் அதிக மைலேஜை வழங்குகின்றன.

இதன் காரணமாக சிஎன்ஜி கார்களுக்கு தற்போது மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. எனவேதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. சிஎன்ஜி கார்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கும் என்பது ஒரு மைனஸ்.

எனவே பவர் அவுட்புட் குறைவாக இருந்தாலும், சிறப்பான மைலேஜ் கிடைக்க வேண்டும் மற்றும் இயக்குவதற்கு குறைவான செலவே ஆக வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள், சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம். இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா காரின் சிஎன்ஜி வெர்ஷனை எப்போது களமிறக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டு விட்டது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களின் வருகை, அதன் நேரடி போட்டி மாடல்களான மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் ஆகிய கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம். இவை இரண்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ள கார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, June 19, 2026, 16:56 [IST]
English summary
Tata sierra cng in the works lower running cost more mileage
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out