மிடில்-க்ளாஸ் மக்களின் பென்ஸ்! டாடா களமிறக்கிய புதிய காரால் வெடவெடத்து போன மாருதி சுஸுகி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய டாடா சியரா காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே புதிய டாடா சியரா காரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்தனர். இதை தொடர்ந்து புதிய டாடா சியரா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் ஜனவரி 15ம் தேதியில் (நேற்று) இருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Tata Sierra Deliveries Begin In India

இதன்படி புதிய டாடா சியரா காரின் டெலிவரி பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. புதிய டாடா சியரா காரை டெலிவரி எடுத்த வாடிக்கையாளர்கள் பலரும், அதை யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக புதிய டாடா சியரா காரின் டெலிவரி வீடியோக்கள் (Videos), சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக (Viral) பரவி வருகின்றன.

புதிய டாடா சியரா கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை ஸ்மார்ட் ப்ளஸ், ப்யூர், ப்யூர் ப்ளஸ், அட்வென்ஜர், அட்வென்ஜர் ப்ளஸ், அக்ளாம்ப்ஸீடு மற்றும் அக்ளாம்ப்ஸீடு ப்ளஸ் ஆகியவை ஆகும். இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

New Tata Sierra

அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 21.29 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதே 12.3 இன்ச் அளவில் முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பெரிய பனரோமிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் எண்ட்ரி, மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம், சவுண்ட் பார் உடன் 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும், புதிய டாடா சியரா பெற்றுள்ளது.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம், புதிய டாடா சியரா காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய டாடா சியரா காரின் வருகை, மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 16, 2026, 14:41 [IST]
English summary
Tata sierra deliveries begin in india price specs and more
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+