நாடே எதிர்பார்த்த கார் 15ம் தேதி வருது! விலை வெறும் ரூ11.49 லட்சம் தான்!

டாடா நிறுவனம் இந்தியாவில் தனது சியாரா என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வரும் 15ம் தேதி இந்த காருக்கான புக்கிங் துவங்குகிறது.இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நாடே எதிர்பார்த்த காரானா சியாரா என்ற காரை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த காருக்கு புக்கிங் துவங்கிய 24 மணி நேரத்தில் 70,000 பேர் இந்த காரை புக் செய்துவிட்டனர். இதனால் இந்த காருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இந்த காரின் டெலிவரி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

Tata Sierra Delivery

டாடா நிறுவனம் இந்த காரை குஜராத் மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் வைத்து தயாரிக்கிறது. இந்த ஆலையில் அந்நிறவனம் பல முக்கிய கார்களை தயாரிக்கிறது. இந்த கார் அதிக போட்டி நிறைந்த 4.2-4.4 மீட்டர் செக்மெண்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

டாடா நிறுவனம் தனது மார்கெட் பங்கை அதிகரிக்க இந்த காரை பயன்படுத்துகிறது. இந்த காருக்கு அதிகமான புக்கிங் வருகிறது. டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த கார் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செக்மெண்டில் 16-17 சதவீதம் வரை இந்த செக்மெண்டில் மார்கெட் பங்கு இருக்கிறது. இதை 20-25 சதவீதமாக உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tata Sierra Delivery

டாடா சியாரா காரை பொருத்தவரை புதிய 1.5 லிட்டர் ஜிடிஐ டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 158 பிஎச்பி பவரையும், 255 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக் உடன் வருகிறது. இது போக 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 105 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது போக மற்றொரு ஆப்ஷனாக 1.5 லிட்டர் 4 பாட் டீசல் இன்ஜின் இருக்கிறது. இது 116 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. டாடா கார்களில் இந்த தொழிற்நுட்பத்தை பெறும் முதல் கார் இது தான்.

இந்த காரின் கேபின் வசதி கர்வ் கார் போன்ற லுக்கிலேயே இருக்கும். ஆனால் இந்த டிசைன் மொழியில் சில அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக 3 ஸ்கிரீன் லேஅவுடன், 12 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, புதிய சென்டர் கன்சோல், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், கனெக்டெட் கார் டெக்னாலஜி, லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் வரும் ஜனவரி 15ம் தேதி டெலிவரி செய்யப்படுகிறது. விரைவில் இந்த கார்களை ரோட்டில் காணலாம். நிச்சயம் மிகப்பெரிய அளவல் இந்த கார்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 10, 2026, 21:30 [IST]
English summary
Tata sierra delivery fast track production starts jan 15 2026
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+