டாடா சியரா EV காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

இந்திய சாலைகளில் வாகன நெருக்கம் அதிகரித்து வருவதற்கு ஏற்ப, விபத்து வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால், காரின் பாதுகாப்பு அம்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உள்ளது. அந்த வகையில், காரின் பாதுகாப்பு அம்சங்களை நேரடியாக தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை இந்த முடிவுகள் வழங்குகின்றன. இதனால் புதிய கார்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் கவனிக்கப்படுகின்றன.

இந்நிலையில், டாடா சியரா EV எஸ்யூவி பாரத் NCAP பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சோதனையில் அதிகபட்சமாக 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளிலும் இந்த கார் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று தனது பாதுகாப்பு திறனை நிரூபித்துள்ளது.

Tata Seirra EV

இந்த சோதனையில் டாடா சியரா EV காரின் உயர் ரகமான Empowered A 75 AWD ACFC வேரியண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 75 kWh பேட்டரி மற்றும் இரண்டு மின்சார மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. சோதனை செய்யப்பட்ட காரின் எடை 2,412 கிலோவாக இருந்தது. கடந்த ஜூன் மாதத்தில் இந்த பாதுகாப்பு மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு நான்கு சக்கர இயக்கம் கொண்ட குறிப்பிட்ட வேரியண்ட்டுக்கு மட்டுமல்லாமல், 63 kWh மற்றும் 75 kWh பேட்டரியுடன் கிடைக்கும் குறிப்பிட்ட ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்டுகளுக்கும் பொருந்தும் என பாரத் NCAP அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் வெவ்வேறு வேரியண்ட்டுகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் முக்கியமான தகவலாக அமைந்துள்ளது.

\

பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் டாடா சியரா EV அதிகபட்சமாக 32 மதிப்பெண்களுக்கு 30.62 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இதில் முன்பக்க மோதல் சோதனையில் 16 மதிப்பெண்களுக்கு 14.62 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஓட்டுனர் மற்றும் முன்பக்க பயணியின் தலை, கழுத்து பகுதிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைத்துள்ளதாக மதிப்பீடு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், ஓட்டுனரின் கீழ்க்கால் பகுதிகளுக்கான பாதுகாப்பு சில இடங்களில் சராசரியான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பக்கவாட்டு மோதல் சோதனையில் மட்டும் முழுமையாக 16க்கு 16 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளது. மேலும், பக்கவாட்டில் கம்பம் போன்ற பொருளுடன் மோதும் சோதனையிலும் தேர்ச்சி பெற்றுள்ளது.

Also Read

குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில் சியரா EV அதிகபட்சமாக 49 மதிப்பெண்களுக்கு 45 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்த பாதுகாப்பு சோதனையில் முழுமையாக 24க்கு 24 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகள் பொருத்தும் வசதிகளும் சிறப்பாக மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்த சோதனையில் 18 மாதங்கள் மற்றும் 3 வயதுடைய குழந்தைகளைப் பிரதிபலிக்கும் மனித பொம்மைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருவருக்கும் பின்புறம் நோக்கிய குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. முன்பக்க மற்றும் பக்கவாட்டு மோதல்களில் இரண்டு குழந்தைகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு கிடைத்துள்ளது.

Also Read

மேலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகளை காரில் பொருத்துவதற்கான சோதனையில் 12க்கு 12 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இரண்டாவது வரிசையின் வெளிப்புற இருக்கைகளில் ISOFIX மற்றும் i-Size வசதிகள் தரமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்களுக்கு இந்த வசதிகள் பயனுள்ளதாக இருக்கும்.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரையில், ஓட்டுனர் மற்றும் முன்பக்க பயணிக்கான ஏர்பேக்குகள், பக்கவாட்டு மார்பு மற்றும் இடுப்பு பாதுகாப்பு ஏர்பேக்குகள், இரண்டு வரிசைகளுக்கும் திரை ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் நினைவூட்டல் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் 540 டிகிரி கேமரா, நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் லெவல் 2+ ADAS தொழில்நுட்பமும் கிடைக்கின்றன. இந்த வசதிகள் ஓட்டுனருக்கு வாகனத்தை கட்டுப்படுத்தவும், சாலையில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே கவனிக்கவும் உதவுகின்றன.

டாடா சியரா EV மட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட சியரா மாடலும் ஏற்கெனவே பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வெளியான அதன் முடிவில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 31.14 மதிப்பெண்களும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 44.73 மதிப்பெண்களும் கிடைத்திருந்தன.

இந்தியாவில் டாடா சியரா EV காரின் விலை ரூ.18.79 லட்சம் முதல் ரூ.26.48 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 63 kWh மற்றும் 75 kWh என இரண்டு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 75 kWh ரியர் வீல் டிரைவ் வேரியண்ட் அதிகபட்சமாக 665 கிமீ ரேஞ்ச் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆல் வீல் டிரைவ் வேரியன்ட் 624 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 120 kW திறன் கொண்ட டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் 20 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 26 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

Article Published On: Wednesday, November 18, 2026, 15:46 [IST]
English summary
Tata sierra ev 5 star bharat ncap safety rating
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out