ஜூன் 30இல் அறிமுகமாகும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... ஓட்டுவதற்கு எப்படி இருக்கும்னு காட்ட இந்த ஆதாரம் போதுமா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக சியரா இவி எலெக்ட்ரிக் காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. கடைசியாக, கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த போது அதனை கேரளாவில் உள்ள யானை பாறையின் மீது ஏற்றி சாதனை படைத்த டாடா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது சியரா இவி எலெக்ட்ரிக் காரையும் அபுதாபியில் உள்ள ஓர் உயரமான மணற்குன்று மீது ஏற்றி அதன் தரத்தை வெளிக்காட்டி உள்ளது.

டாடா நிறுவனத்தின் சியரா கார் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுவரும் நிலையில், அதன் எலெக்ட்ரிக் வெர்சனாக சியரா இவி காரையும் முடிந்தவரையில் விரைவாக மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் தயாராகி வருகிறது. கடந்த சில வாரங்களாக, சியரா இவி கார் குறித்த டீசர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.

tata sierra ev electric car on tal moreeb sand dune

இந்த டீசர்களில், பாலைவன பகுதியில் சியரா இவி கார் ஓட்டப்படுவது போன்று காட்டப்பட்டு இருந்தது. இந்த பாலைவன பகுதி ஆனது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நாட்டின் தலைநகர் அபுதாபிக்கு அருகே உள்ள தால் மொரீப் மணற்குன்று ஆகும். அருகே என்று சொன்னால், பரபரப்பான அபுதாபி நகர்புற வாழ்க்கையில் இருந்து இந்த மணற்குன்று பல கிமீ தொலைவில் உள்ளது.

உலகிலேயே மிகவும் உயரமான மணற்குன்று ஆக, தால் மொரீப் சுமார் 300மிமீ வரையில் உயரம் கொண்ட மணல் திட்டுகளை கொண்டுள்ளது. சில மணல் திட்டுகள் செங்குத்தாக உள்ளன. இதனாலேயே, இந்த மணற்குன்றுகளின் மீது சாதாரணமாக நடப்பதே கடினம் எனும் சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய சியரா இவி எலெக்ட்ரிக் காரை ஓட்டி அசத்தியுள்ளது.

tata sierra ev electric car on tal moreeb sand dune

புதிய சியரா இவி காரில் உள்ள சாண்ட் மோட், பூஸ்ட் மோட் மற்றும் குவாட் வீல் டிரைவ் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி இந்த சாகச சோதனை பயணம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குவாட் வீல் டிரைவ் என்கிற பெயரில் இரு மோட்டார்களுடன் ஆல்-வீல்-டிரைவ் செட்-அப் சியரா இவி காரில் வழங்கப்பட உள்ளதாக ஏற்கனவே டாடா நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.

இருப்பினும், அந்த சிஸ்டத்துடன் காரை இவ்வாறு பொது வெளியில் ஓட்டிக் காட்டியது இதுவே முதல்முறை என்றே சொல்ல வேண்டும். காரின் ஆஃப்-ரோடு திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த சாகச பயணத்துடன் சேர்த்து, சியரா இவி எலெக்ட்ரிக் காரின் சில தகவல்களையும் புதியதாக டாடா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி பார்த்தோமேயானால், டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில் உள்ளதை போன்று சியரா இவி எலெக்ட்ரிக் காரிலும் டெர்ரன் மோட்கள் மற்றும் பூஸ்ட் மோட் வழங்கப்பட உள்ளது. இதைவிட முக்கியமாக, சியரா இவி காரில் அதிகப்பட்சமாக 500கிமீ-க்கும் அதிகமான ரேஞ்சை பெறலாம் என டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதாவது, இந்த எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம். மேலும், இதுதொடர்பாக புதியதாக வெளியிடப்பட்டுள்ள டீசரில் காரின் அழகான ஸ்டைலான தோற்றத்தையும் மீண்டும் ஒருமுறை பார்க்க முடிகிறது. மேலும் இந்த டீசரில், காரில் சாண்ட் மோட் தேர்வு செய்யப்பட்டு இருப்பதையும், பூஸ்ட் மோட் ஆக்டிவேட்டட் செய்யப்பட்டு இருப்பதும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் காட்டப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருகிற ஜூன் 30ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே மார்க்கெட்டில் கவனிக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் இந்த டீசரினால் சியரா இவி கார் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 500கிமீ-க்கும் அதிகமான ரேஞ்ச் என்பது உண்மையில் அசாத்தியமான ரேஞ்ச் என்றே சொல்ல வேண்டும்.

Article Published On: Sunday, June 28, 2026, 10:57 [IST]
English summary
Tata sierra ev electric car climbs the tal moreeb sand dune in abu dhabi uae
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out