இன்று அறிமுகமாகும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கும்? அறிமுகத்துக்கு முன் ஒரு பார்வை!

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 30ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மேற்கொள்ளப்படும் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் ஆனது மும்பையில் பாந்த்ரா குர்லா பகுதியில் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் சியரா இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான நான்கு அம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெளிப்புற தோற்றம்
டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் படங்கள் ஏற்கனவே இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. ஏனெனில், ஏற்கனவே விற்பனையில் உள்ள பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்ட சியரா காரின் தோற்றத்தில் தான் கிட்டத்தட்ட சியரா இவி வெளிப்புற தோற்றம் உள்ளது. ஆனால், காரின் முன்பக்கம் சற்று மாற்றப்பட்டு உள்ளது. எலெக்ட்ரிக் கார் என்பதால், முன்பக்க க்ரில்லின் டிசைன் மாற்றப்பட்டுள்ள்ளது.

tata sierra ev electric launch countdown

ஹெட்லைட்களை இணைக்கும் LED DRL-கள் காரின் முழு அகலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. முன் பம்பருடன் சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்கிட் பிளேட் காருக்கு முரட்டுத்தனமான லுக்கை கொடுக்கிறது. காரின் பக்கவாட்டில், ஜன்னல் கண்ணாடிகள் பெட்ரோல்/ டீசல் என்ஜின் சியராவை போன்று பெரியதாக தொடரப்பட்டுள்ளன. முன்பக்கத்தை போல காரின் பின்பக்கத்திலும் டெயில்லைட்களை இணைக்கும் வகையில் LED லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

உட்புற தோற்றம்
சியரா இவி காரின் கேபின் ஆனது இப்போதுள்ள அனைத்து டாடா கார்களை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது. லேயர் டிசைனில், ஐவோரி நிறத்தில் டாஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐவோரி நிறத்தை காருக்குள் பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஒளிரக்கூடிய டாடா லோகோவை கொண்ட 4-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரத்திலும் கூட. டாஷ்போர்டில் மூன்று திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

tata sierra ev electric launch countdown

இதில், இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் முன் இருக்கை பயணிக்கான கூடுதல் திரை உள்ளிட்டவை அடங்கும். டாடா நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில், சியரா இவி காரில் பனோராமிக் சன்ரூஃப் -ஐயும் பார்க்க முடிந்தது. இவற்றுடன், இந்த எலெக்ட்ரிக் காரினுள் பல இடங்களில் ஸ்டோரேஜ் பகுதிகளையும் எதிர்பார்க்கலாம்.

தொழிற்நுட்ப & பாதுகாப்பு அம்சங்கள்
பனோராமிக் சன்ரூஃப் மற்றும் மூன்று திரைகள் மட்டுமின்றி, வெண்டிலேட்டட் & பவர்டு முன் இருக்கைகள், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வயர்லெஸ் இணைப்பு வசதி, பவர்டு டெயில்கேட், 12-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கிறோம்.

சியரா இவி காரில் என்னென்ன தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது அறிமுகத்திற்கு பிறகே தெரியவரும். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், சியரா இவி 6 ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS, 360-டிகிரி கேமரா, முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

பேட்டரி & ரேஞ்ச்
தொழிற்நுட்ப அம்சங்களை போன்று, சியரா இவி காரில் என்ன மாதிரியான பேட்டரி & எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட உள்ளது என்பதையும் இன்னும் டாடா நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. ஹாரியர் இவி காரை போன்று 65kWh மற்றும் 75kWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். சியரா இவி இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உடன் ஆல்-வீல்-டிரைவ் காராகவும் விற்பனை செய்யப்பட உள்ளதை டாடா உறுதிப்படுத்தி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால மக்கள் விரும்பும் அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டதாக டாடா சியரா இவி களமிறக்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18 லட்சம் - ரூ.25 லட்சம் அளவில் எதிர்பார்க்கப்படுகின்றன. விற்பனையில் இந்த புதிய டாடா எலெக்ட்ரிக் காருக்கு ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா BE 6, எம்ஜி ZS இவி, டாடா ஹாரியர் இவி, டொயோட்டா எபெல்லா உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Article Published On: Tuesday, June 30, 2026, 14:26 [IST]
English summary
Tata sierra ev electric car launch countdown four reasons driving indias hype
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out