பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ உயர்ந்தாலும் பிரச்சனையே இல்ல! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடாவின் புது கார்

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). இந்த கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ள டாடா சியரா காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது விற்பனையில் இருப்பது டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் ஆகும். இதற்கு அடுத்தபடியாக டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இதன் அறிமுகம் குறித்த புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

Tata Sierra Side Design

கார்வாலே தளத்தில் வெளியாகியுள்ள இந்த தகவலின்படி, நடப்பு 2026-27ம் நிதியாண்டின் 2வது காலாண்டில், டாடா சியரா இவி (Tata Sierra EV) எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது வரும் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காருக்கும், தற்போது விற்பனையில் உள்ள டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலெக்ட்ரிக் காருக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கும் என கூறப்படுகிறது அதாவது டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Sierra Interior

டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் 55 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி ஆப்ஷன் அப்படியே டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 502 கிலோ மீட்டர்களாக உள்ளது.

கிட்டத்தட்ட இதே அளவிற்கான டிரைவிங் ரேஞ்ஜை, டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரிலும் நாம் எதிர்பார்க்கலாம். 55 kWh தவிர, மேலும் ஒரு பேட்டரி ஆப்ஷனும், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய தகவல் நமக்கு குறைவாகவே கிடைத்துள்ளன.

இருப்பினும் வசதிகளை (Features) பொறுத்தவரையில், டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனில் வழங்கப்பட்டு வரும் ஏராளமான அம்சங்களை, அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் நாம் எதிர்பார்க்க முடியும். இதன்படி டாடா சியரா காரில் வழங்கப்பட்டு வரும் அதே ட்ரிபிள் ஸ்க்ரீன் லே அவுட், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் இருக்கும். அதே நேரத்தில் மற்றொரு திரை முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக வழங்கப்பட்டிருக்கும். மேலும் 75க்கும் மேற்பட்ட வசதிகள் உடன் ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பமும் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கூல்டு க்ளவ் பாக்ஸ், குரல் மூலம் கட்டுப்படுத்த கூடிய பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், பின் பகுதியில் டீஃபாகர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற அம்சங்களை எல்லாம் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்க முடியும். டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரை குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 15 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

Article Published On: Saturday, May 16, 2026, 9:06 [IST]
English summary
Tata sierra ev india launch in q2 of fy27 expected price range safety features
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+