டாடா கை ஓங்க போகுது! மொத்த இந்தியாவும் காத்து கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் 30ம் தேதி அறிமுகம்! விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனின் டெலிவரி (Delivery) பணிகள் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கின.
தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 7,500 டாடா சியரா கார்கள் விற்பனையாகி வருகின்றன. இந்திய வாடிக்கையாளர்களை டாடா சியரா எவ்வளவு கவர்ந்துள்ளது? என்பதற்கு இதுவே சாட்சி. எனவே டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வர போகிறது என்பது ஏற்கனவே நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் எப்போது? என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த கேள்விக்கும் நமக்கு அதிகாரப்பூர்வமாக பதில் கிடைத்துள்ளது.
ஆம், டாடா சியரா இவி (Tata Sierra EV) எலெக்ட்ரிக் கார் வரும் ஜுன் 30ம் தேதி (June 30) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி (Launch Date) குறித்து டீம் பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி வரிசையில், டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு கீழாக டாடா சியரா இவி நிலைநிறுத்தப்படவுள்ளது. எனவே இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஒருவேளை பாஸ் (BaaS) முறை வழங்கப்பட்டால், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த முறையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 3.5-4 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 11.49 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே acti.ev+ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 600 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கலாம்.
டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரானது சிங்கிள் மோட்டார் மற்றும் ட்யூயல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசதிகளை (Features) பொறுத்தவரையில், டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவே, எலெக்ட்ரிக் வெர்ஷனின் முன் பக்க டேஷ்போர்டிலும் 3 திரைகள் வழங்கப்படுவற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதில், முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக வழங்கப்படவுள்ள திரை மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஆக செயல்படும் திரை ஆகியவை தலா 12.3 இன்ச் என்ற அளவில் இருக்கும். அதே நேரத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படவுள்ள திரை 10.25 இன்ச் என்ற அளவில் இருக்கும். அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS) போன்ற பாதுகாப்பு வசதிகளையும், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகிறது. புதிய சியரா இவி எலெக்ட்ரிக் காரின் வருகை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆதிக்கத்தை அதிகரித்து கொள்ள உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications