ஒரு தடவ சார்ஜ் பண்ணீட்டா 600 கிமீ ஓடும்! இந்த ரேட்ல மட்டும் வந்துச்சுனா மாருதி, மஹிந்திரா பொழப்பு சிரிச்சிரும்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Electric Version) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இந்த கேள்விக்கு தற்போது நமக்கு பதில் கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்று கொண்டுள்ள ஜூன் மாதத்திலேயே டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tata Sierra EV

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்கள் எல்லாம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றுடன் டேஷ்போர்டில், முன் பக்க பயணியின் இருக்கை முன்பாகவும் ஒரு திரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனில் இருப்பதை போன்றே முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள் கொண்ட அமைப்பை நாம் எதிர்பார்க்கலாம். இவை தவிர பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, டால்பி அட்மாஸ் உடன் 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Tata Sierra EV Front Design

அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 55 kWh அல்லது 65 kWh திறன் கொண்ட பேட்டரிகளாகவோ அல்லது 65 kWh மற்றும் 75 kWh திறன் கொண்ட பேட்டரிகளாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 600 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் புதிய எலெக்ட்ரிக் கார்களில் பாஸ் (Baas - Battery as a Service) திட்டமும் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift) மற்றும் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Tiago EV Facelift) கார்கள் பாஸ் திட்டம் மூலமும் கிடைக்கின்றன. எனவே டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரிலும் பாஸ் திட்டம் வழங்கப்படும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஒருவேளை பாஸ் திட்டம் வழங்கப்பட்டால், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இந்த முறையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 3.5-4 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா (Toyota Urban Cruiser e Bella), ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டாடா சியரா இவி நேரடி போட்டியாக இருக்கும்.

Article Published On: Wednesday, June 10, 2026, 20:07 [IST]
English summary
Tata sierra ev launch in june 2026 expected price baas range safety features
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out