சிங்கிள் சார்ஜில் 630 கிமீ ஓடும்! விலை 10 லட்சம்தான்! நாடே எதிர்பார்க்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா சியரா இவி (Tata Sierra EV) எலெக்ட்ரிக் கார், நாளை (ஜூன் 30) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options): டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி ஆப்ஷன்களாக இருக்கலாம். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே சுமார் 550 கிலோ மீட்டர்கள் மற்றும் 630 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வசதிகள் (Features): டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப், டால்பி அட்மாஸ் சப்போர்ட் உடன் 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் முன் பக்க டேஷ்போர்டில், டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனை போல், 3 ஸ்க்ரீன் லேஅவுட் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக வழங்கப்படும் ஸ்க்ரீன் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை தலா 12.3 இன்ச் அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரானது 10.25 இன்ச் என்ற அளவில் இருக்கலாம்.

பாதுகாப்பு வசதிகள் (Safety Features): டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.
போட்டி மாடல்கள்: வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார் செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா (Toyota Urban Cruiser e bella), ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) போன்ற கார்கள் உடன், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.
விலை (Price): டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் பாஸ் (BaaS) முறையில் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பாஸ் முறையை தேர்வு செய்பவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 4 ரூபாய் என்ற அளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை அனைத்தும் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. அதிகாரப்பூர்வமான விலை நாளைதான் அறிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா இவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலையை சரியாக நிர்ணயம் செய்தால், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய வெற்றியை பெறும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications