மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களின் மார்க்கெட்டை காலி பண்ணும் முடிவில் டாடா! நல்லா காலை நீட்டி படுத்துட்டு போகலாம்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்ததாக சியரா இவி (Sierra EV) எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன் உடனான சியரா கார் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், சியரா இவி காரின் அறிமுகத்திற்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

2000ஆம் துவக்கங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்த கார்களுள் ஒன்று சியரா ஆகும். இதனாலேயே பல வருடங்களுக்கு பிறகு அதே சியரா பெயரில் மீண்டும் ஒரு புதிய காரை டாடா அறிமுகம் செய்தது. தோற்றத்திலும், பழைய சியரா காரின் பரிணாம வளர்ச்சியாகவே புதிய சியரா வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

tata sierra ev spy images

இதன் புதிய எலெக்ட்ரிக் வெர்சனும் கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்றாலும், தற்போது சோதனை ஓட்டத்தின்போது பொது வெளியில் அடையாளம் காணப்பட்டுள்ள சியரா இவி எலெக்ட்ரிக் கார்கள் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளித்துள்ளன. அதாவது, அறிமுகத்திற்கு முன்னதாக காரின் தோற்றம் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக கார் மறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவ்வளவு மறைப்புகளையும் தாண்டி சியரா இவி பற்றிய சில விஷயங்கள் நமக்கு தெரியவந்துள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் சோதனை ஓட்ட படங்களில், சியரா இவி எலெக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் சில்வர் நிறத்தில் பம்பர் வழங்கப்பட்டுள்ளதை காணலாம். கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருந்தாலும், அலாய் சக்கரங்கள் மறைக்கப்படவில்லை. இதற்கு காரணம், அலாய் சக்கரங்களின் டிசைன் பெரிய அளவிற்கு மாற்றப்படாததினால் ஆகும்.

tata sierra ev spy images

தற்போது வெளியாகி இருக்கும் சோதனை ஓட்ட படங்களில், இரு சியரா இவி எலெக்ட்ரிக் கார்களை காணலாம். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான டிசைனில் அலாய் சக்கரங்கள் இருப்பதையும் காணலாம். இதில் இருந்து, புதிய சியரா இவி காரில் மிட் வேரியண்ட்களில் ஒருவிதமான டிசைனில் அலாய் சக்கரங்களும், டாப் வேரியண்ட்களில் வேறு விதமான டிசைனில் அலாய் சக்கரங்களும் வழங்கப்பட உள்ளன என்பதை அறிய முடிகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில், சியரா இவி காரினுள் டாஷ்போர்டில் பெரிய அளவில் தொடுதிரை வழங்கப்பட உள்ளதை பார்க்க முடிகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த தொடுதிரை ஆனது சுமார் 15 இன்ச் நீளம் கொண்டதாக இருக்கும். இதனுடன், டிரைவருக்கு தேவையான விபரங்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையும் அளவில் நன்கு பெரியதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்பை படங்களில் காருக்குள் கேபினின் அப்ஹோல்ஸ்டரி தெளிவாக தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் புதிய மெட்டீரியல்களில், புதிய நிறங்களில் கேபின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி ஆப்ஷன்களாக 65kWh மற்றும் 75kWh பேட்டரிகள் சியரா இவி-இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், 4-வீல்-டிரைவ் சிஸ்டமும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியரா பெட்ரோல்/டீசல் காருக்கு மார்க்கெட்டில் கணிசமான கவனம் கிடைத்துள்ளதால், சியரா இவி எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கு இது சரியான தருணமே ஆகும். இருப்பினும், இந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட சியரா இவி எலெக்ட்ரிக் கார் அடுத்த ஜூன் மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

260 பிஎச்பி-க்கும் அதிகமான இயக்க ஆற்றலை வழங்கக் கூடியதாக புதிய சியரா இவி அறிமுகம் செய்யப்பட்டால், மார்க்கெட்டில் வரவேற்பை பெற்றுவரும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) எலெக்ட்ரிக் காருக்கு இது சவாலான போட்டியாக விளங்கும். சியரா இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.20 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Thursday, May 7, 2026, 11:01 [IST]
English summary
Tata sierra ev new spy images large touchscreen spotted check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+