இந்தியாவில் வெற்றிக்கொடி நாட்டிய கார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி! டாடா மோட்டார்ஸ் அதிரடி திட்டம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் 7,000-8,000 டாடா சியரா கார்கள் விற்பனையாகி வருகின்றன. இதேபோல் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்வதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

Tata Sierra EV

இதில், ஸ்பெஷல் எடிசன் (Special Edition) மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது ஒன்றாகும். டாடா சியரா ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும், ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் என்பவை, ஒரு காரின் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இருந்து, சற்று அப்டேட் செய்யப்பட்டவை ஆகும்.

குறிப்பாக உட்புற மற்றும் வெளிப்புற டிசைனில் நாம் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் தனது பல்வேறு கார்களின் பந்திப்பூர் எடிசன், காஸிரங்கா எடிசன் மற்றும் ஸ்டீல்த் எடிசன் போன்ற ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனை செய்தது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

New Tata Sierra

தற்போதைய நிலையில் டார்க் எடிசன் மற்றும் ரெட் டார்க் எடிசன் போன்ற பெயர்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. டாடா சியரா ஐசி இன்ஜின் மற்றும் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் ஆகியவற்றின் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதுடன், சியரா ஐசி இன்ஜின் மற்றும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்யவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 11.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 18.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இதில், எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி சந்தைக்கு புதுவரவு ஆகும். டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 63 kWh மற்றும் 75 kWh ஆகியவை ஆகும். இதில், 63 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 566 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 75 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 665 கிலோ மீட்டர் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதே பேட்டரி ஆப்ஷனின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 624 கிலோ மீட்டர்கள் ஆகும். அத்துடன் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சம் இல்லை.

இதில், 70க்கும் மேற்பட்ட வசதிகளுடன் கூடிய ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்துடன் ஃபாலோ மீ ஹோம் அம்சத்துடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய முன் பக்க வைப்பர்கள், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 22 வசதிகளுடன் கூடிய லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) மற்றும் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) போன்றவற்றில் பாஸ் (BaaS) திட்டத்தை வழங்குகிறது. எனவே ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தனியாக கட்டணம் செலுத்தினாலும் கூட, அவை மிகவும் குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா இவி எலெக்ட்ரிக் காரில் பாஸ் முறையை வழங்கவில்லை. இது வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Saturday, July 4, 2026, 13:21 [IST]
English summary
Tata sierra ev special edition to launch soon in india
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out