வரலாறே மாறுது! டாடா கார்ல QWD-ங்கற இந்த பேட்ஜை பாத்ததும் போட்டி நிறுவனங்கள் வெடவெடத்து போயிருக்கும்!
இந்திய சந்தையில் சமீப காலம் வரை எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை (All Wheel Drive System) பெரிதாக எந்தவொரு நிறுவனமும் வழங்கவில்லை. ஆனால் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்த வரலாற்றை மாற்றி எழுதி கொண்டுள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார்களிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை வழங்க தொடங்கியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் என்ற பெருமை டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) எலெக்ட்ரிக் காருக்கு உண்டு. இந்த வரிசையில் மற்றொரு டாடா எலெக்ட்ரிக் காரும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அது டாடா சியரா இவி (Tata Sierra EV) எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் வரும் ஜூன் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சியரா இவி எலெக்ட்ரிக் காரின் டீசர்களை (Teasers) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டு வருகிறது.
இந்த வரிசையில் TATAev யூடியூப் (Youtube) சேனலில் தற்போது புதிய டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படவிருப்பது இந்த டீசர் வீடியோவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள QWD என்பது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுவதால், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில், ஆஃப் ரோடு சாகச பயணங்களையும் மேற்கொள்ள முடியும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தாலும் கூட, டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் இதர தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும் 65 kWh மற்றும் 75 kWh திறன் கொண்ட 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 600 கிலோ மீட்டருக்கு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இருப்பினும் டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் (BaaS) திட்டம் வழங்கப்பட்டால், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே நம்மால் வாங்கி விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
ஆனால் நீங்கள் பாஸ் முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 4 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் டிரைவிங் ரேஞ்ச் மற்றும் விலை போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் எல்லாம் வரும் ஜூன் 30ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV), மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா (Toyota Urban Cruiser e Bella) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரின் வருகை நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications