டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரை இந்த 5 காரணங்களுக்காகவே தைரியமாக வாங்கலாம்!
டாடா நிறுவனத்தின் உணர்ச்சிப்பூர்வமான பிராண்டான 'சியரா' மீண்டும் இந்திய சாலைகளை புதிய அவதாரத்தில் ஆள வந்துவிட்டது. ஆம், நீண்ட நாட்களாக ஆட்டோமொபைல் உலகில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா இவி (Tata Sierra EV) இறுதியாக இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. பிரீமியம் அம்சங்கள், மிரட்டலான எலக்ட்ரிக் தொழில்நுட்பம் மற்றும் மலைக்க வைக்கும் ரேஞ்ச் ஆகியவற்றுடன் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் இந்த எஸ்யூவி கார் களமிறங்கப்பட்டு உள்ளது.
இதனால், சந்தையில் உள்ள அதிக விலை கொண்ட சொகுசு எலக்ட்ரிக் கார்களுக்கு இது இப்போதே சிம்ம சொப்பனமாக மாறத் தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா இவி-யை ரூ.18.79 லட்சம் என்கிற நம்ப முடியாத ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா ஹாரியர் இவி தயாரிக்கப்படும் அதே அதிநவீன 'Acti.ev+' பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார், இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு அசத்தலான செயல்திறனை வழங்குகிறது. டாடா சியரா இவி-யை இவ்வளவு ஸ்பெஷலாக மாற்றும் அந்த 5 முக்கிய காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

ஆரம்ப வேரியண்ட்டிலேயே அதிக பிரீமியம் வசதிகள்!
ரூ.18.79 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் வந்தாலும், இதன் அடிப்படை வேரியண்ட்டிலேயே (Base Variant) சொகுசு வசதிகளை டாடா வாரி வாரி வழங்கியுள்ளது. இதில் பை-எல்இடி (bi-LED) புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பிரம்மாண்டமான 31.24 செ.மீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ESP, iRA கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் முழு டிஜிட்டல் காக்பிட் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இவை மட்டுமின்றி, மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், பார்க் அசிஸ்ட் கொண்ட ரியர்-வியூ கேமரா, அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே மற்றும் சொகுசான பயணத்திற்கான அல்ட்ரா கிளைடு சஸ்பென்ஷன் என ஏகப்பட்ட மிரட்டலான அம்சங்கள் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

சீறிப் பாயும் அதிவேக குவாட்-வீல்-டிரைவ் (QWD) சிஸ்டம்
வேகத்தை விரும்பும் சாகச பிரியர்களுக்கு இந்த கார் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். சியரா இவி மாடலில் கொடுக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த குவாட்-வீல்-டிரைவ் (QWD) சிஸ்டம், ஒட்டுமொத்தமாக 306 PS பவரையும், 504 Nm டார்க் திறனையும் வாரி வழங்குகிறது. இந்த செக்மென்ட்டிலேயே மிக அதிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது. இதனால் வெறும் 5.8 வினாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை இந்த கார் எட்டிப்பிடித்து நம்மை உறைய வைக்கிறது.
பிரம்மாண்ட பேட்டரி மற்றும் வியக்க வைக்கும் மைலேஜ்
சார்ஜ் தீர்ந்துவிடுமே என்கிற கவலை இந்த காரில் உங்களுக்கு வேண்டவே வேண்டாம். ஏனெனில், சியரா இவி 65 kWh மற்றும் 75 kWh ஆகிய இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வெளிவந்துள்ளது. இதன் சிறிய பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 565 கி.மீ ரேஞ்ச் வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதன் பெரிய பேட்டரி பேக் முழு சார்ஜில் 665 கி.மீ வரையிலான அபாரமான ரேஞ்சை அள்ளித் தருகிறது. அதுமட்டுமா, டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக வெறும் 15 நிமிடங்களில் 263 கி.மீ தூரம் வரை பயணிப்பதற்கான சார்ஜை ஏற்றிவிட முடியும் என்பது கூடுதல் சிலிர்ப்பு.
சவாலான பாலைவன மணலையும் வென்ற ஆஃப்-ரோடு திறன்!
சியரா இவி வெறும் ஆடம்பர கார் மட்டுமல்ல, கரடுமுரடான பாதைகளையும் அசால்ட்டாக கடக்கும் ஆஃப்-ரோடு கில்லாடி ஆகும். உலகிலேயே மிகவும் கடினமான சரிவை கொண்ட அரபு அமீரகத்தின் 'டல் மோரீப்' (Tal Moreeb) மணல் குன்றை இந்த கார் வெற்றிகரமாக ஏறி கடந்து சாதனை படைத்துள்ளது. நார்மல், புல்வெளி/பனி, சேறு/சரளை, மணல், ராக் க்ரால் மற்றும் பிரத்யேக கஸ்டம் என 6 விதமான டெரெய்ன் மோடுகள் இதில் உள்ளன. இதன் சாண்ட் மோடு மற்றும் பூஸ்ட் மோடை பயன்படுத்தி எந்தவொரு செங்குத்தான மலைப்பாதையையும் இந்த எஸ்யூவி கார் எளிதாக கடந்துவிடும்.
அதிநவீன Acti.ev+ பிளாட்ஃபார்ம் மற்றும் அட்வான்ஸான தொழிற்நுட்பங்கள்
ஹாரியர் இவி காருடன் தனது கட்டுமானத்தைப் பகிர்ந்துகொள்ளும் சியரா இவி, டாடாவின் அதிநவீன 'Acti.ev+' பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிக கேபின் இடவசதி, அசாதாரண பாதுகாப்பு மற்றும் பன்முகத்தன்மையை வழங்குகிறது. அத்துடன், இதில் லெவல்-2 ADAS, 12-ஸ்பீக்கர் கொண்ட JBL சவுண்ட் சிஸ்டம், புதுமையான டிரிபிள்-ஸ்கிரீன் செட்டப், V2L சார்ஜிங் வசதி, வானமே தெரியும்படியான பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் கீ ஆக்ஸஸ், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), 6 ஏர்பேக்குகள், பவர்டு டெயில்கேட், சம்மன் மோடு (Summon Mode), மற்றும் டிரைவ் பே (Drive Pay) போன்ற அதிநவீன சொகுசு அம்சங்களும் நிறைந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களையும், சொகுசு வசதிகளையும் இந்த பட்ஜெட்டில் தருவதால், டாடா சியரா இவி இந்திய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் சந்தையில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. புக் செய்தவர்களுக்கு இந்த காரை வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் டெலிவிரி செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications