சியரா EV-யின் அடிப்படை வேரியன்டிலேயே அசத்தலான வசதிகளைக் கொடுத்து மிரட்டியிருக்கும் டாடா மோட்டார்ஸ்

புத்தம் புதிய சியரா EV-யை நேற்று (ஜூன் 30) வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். 360 டிகிரியில் சிறப்பான ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவே சியரா EV வெளியாகியுள்ளது. இந்தக் காரை, ப்யூர், ப்யூர் S, அட்வென்சர், எம்பவர்டு, எம்பவர்டு A என ஐந்து வேரியன்ட்களாக டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. வேரியன்ட் வாரியாக இந்த எலெக்ட்ரிக் காரில் இருக்கும் வசதிகளை இங்கே பார்க்கலாம்.

சியரா EV ப்யூர் வேரியன்ட்:

63 kWh பேட்டரி பேக், 238 hp பவர் மற்றும் 315 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பவர்ட்ரெயின். 565 கிமீ ரேஞ்சைக் கொண்டுள்ளது. 18.79 லட்சம் ரூபாய் என்ற விலையைக் கொண்டுள்ளது. இந்த வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் பின்வருமாரு.

Tata Sierra EV

பை-ப்ரொஜெக்டார் LED முகப்பு விளக்குகள்
ஆட்டோ முகப்பு விளக்குகள்
LED DRL-கள்
சீக்வென்ஷியல் LED இன்டிகேட்டர்கள்
LED பின்பக்க விளக்குகள்
ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள்
ஷார்க் ஃபின் ஆண்டனா
18 இன்ச வீல்கள்
பிளாக் மற்றும் கிரே கேபின் தீம்
பிளாக் நிற சீட்கள்
4 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல்
முன்பக்க ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட்
பின்பக்கம் உயர்த்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் ஹெட்ரெஸ்ட்

ரியர் சன்ஷேடு
ரெயின் சென்சிங் வைப்பர்கள்
கிளைமேட் கண்ட்ரோல்
ரியர் ஏசி வென்ட்கள்
கூல்டு கிளவ்பாக்ஸ்
க்ரூஸ் கண்ட்ரோல்
சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோடுகள்
ஒன் டச் அப்/. டவுன் டிரைவர் சைடு விண்டோ
டைப்-C USB போர்ட்கள்
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
8 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம்
அமேஸான் அலெக்ஸா சப்போர்ட்

Tata Sierra EV

EBD-யுடன் கூடிய ABS
6 ஏர்பேக்குகள்
அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள்
ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்
சென்சார்களுடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா
ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்
ஆகிய வசதிகளை ப்யூர் வேரியன்ட் கொண்டுள்ளது.

சியரா EV ப்யூர் S வேரியன்ட்:

ப்யூர் வேரியன்டில் இருக்கும் அதே பவர்ட்ரெயின் தான் ப்யூர் S வேரியன்டிலும். இந்த வேரியன்டினை 19.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். மேலே ப்யூர் வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளுடன், கீழ்காணும் கூடுதல் வசதிகள் ப்யூர் S வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

கார்னரிங் வசதியுடன் கூடிய LED ஃபாக் விளக்குகள்
ரூஃப் ரெயில்கள்
பார்சல் டிரே
கீலெஸ் எண்ட்ரி
புஷ் பட்டன் ஸ்டார்ட்
பனோரமிக் சன்ரூஃப்
எலெட்ரானிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் ORVMகள்
டில்ட் அண்டு டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல்
பேடில் ஷிப்டர்கள்
ஸ்டீயரிங் வீல் மவுன்ட்டட் கண்ட்ரோல்கள்
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
கனெக்டட் கார் தொழில்நுட்பம்
TPMS
முன்பக்க பார்க்கிங் சென்சார்கள்

சியரா EV அட்வென்சர் வேரியன்ட்:

மூன்றாவதாக இருக்கும் அட்வென்சர் வேரியன்டில் 63 kWh மற்றும் 75 kWh என இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். 63 kWh வேரியன்டுடன் மேலே நாம் பார்த்த அதே எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் தான். பெரிய பேட்டரியுடன் 209 hp பவர் மற்றும் 315 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இது 665 கிமீ வரை ரேஞ்சையும் கொடுக்கிறது.

அட்வென்சர் வேரியன்டின் 63 kWh பேட்டரி பேக் மாடலை 20.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், 75 kWh பேட்டரி பேக் மாடல 22.19 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம். ப்யூர் S வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களுடன் கீழ்க்காணும் கூடுதல் வசதிகள் சியரா EV-யின் இந்த அட்வென்சர் வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

லெதர் ராப்புடு ஸ்டீயரிங் வீல்
லெதர் ராப்புடு கியர் நாப்
மூன் லைட்டிங்
பேக் பாக்கெட்டுகளுடன் கூடிய முன்பக்க சீட்கள்
பாஸ் மோடு
தை சப்போர்ட் எக்ஸ்டென்டர்
ஆட்டோ டிம்மிங் IRVM
எக்ஸ்பிரஸ் கூலிங்
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்
டால்பி அட்மாஸ் வசதியுடன் 12 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL சவுண்டு சிஸ்டம்
ரியர் வைப்பர் வாஷர் மற்றும் டீஃபாகர்

சியரா EV எம்பவர்டு வேரியன்ட்:

அட்வென்சர் வேரியன்டில் இருக்கும் அதே பவர்ட்ரெயின் தேர்வுகள் தான் எம்பவர்டு வேரியன்டிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் சிறிய பேட்டரி பேக் மாடலை 22.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், பெரிய பேட்டரி பேக் மாடலை 23.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம். இந்த வேரியன்டில் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் பின்வருமாரு.

ரியர் ஃபாக் விளக்குகள்
வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்
படில் விளக்குகள்
60:40 ரியர் ஸ்பிளிட் சீட்
6 வே பவர்டு டிரைவர் சீட்
வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள்
டூயல் ஸோன் AC
ட்ரிபிள் ஸ்கிரீன் செட்டப்
ஆகிய அம்சங்களைக் கூடுதலாகக் கொண்டுள்ளது.

சியரா EV எம்பவர்டு A வேரியன்ட்:

சியரா EV-யின் டாப் எண்டு வேரியன்ட் இது தான். இந்த வேரியன்டில் 75 kWh என்ற ஒரே பேட்டரி பேக் தேர்வு மட்டுமே. ஆனால், இரண்டு விதமான பவர்ட்ரெயின் தேர்வுகள் உள்ளன. ஒன்று மேலே எம்பவர்டு வேரியன்டில் பார்த்த அதே பவர்ட்ரெயின். மற்றொன்று குவாடு வீல் டிரைவ் வசதியைக் கொண்டது. இந்த வேரியன்டில் முன்பக்கம் 140 hp பவரை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும், ஒட்டுமொத்தமாக 504 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டிருக்கும். குவாடு வீல் டிரைவ் வேரியன்டானது 624 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும். ரியர் வீல் டிரைவ் வசதி கொண்ட எம்பவர்டு A வேரியன்டை 24.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், குவாடு வீல் டிரைவ் வசதி கொண்ட ட்ரிம்மை 25.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம்.

இந்த டாப் எண்டு வேரியன்டில், மேலே நாம் பார்த்த அனைத்து வசதிகளுடனுடம்,
ஹெட்ஸ் அப் டிஸ்பிளே
லெவல் 2 ADAS மற்றும்
19 இன்ச் வீல்கள் (முந்தைய வேரியன்ட்களில் 18 இன்ச் வீல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன)
ஆகிய வசதிகளைக் கூடுதலாகக் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடிப்படை வேரியன்டான ப்யூரே மிகவும் அதிக விலையைக் கொண்டிருப்பதால், பெரும்பாலான மேம்பட்ட வசதிகளை அந்த வேரியன்டே கொண்டுள்ளது. நிறைய வாடிக்கையாளர்களுக்கு அதுவே தேவைகளை பூர்த்தி செய்யும் ஒன்றாக இருக்கும். எனினும் பெரிய பேட்டரி பேக் வேண்டும் என்றால் சற்று கூடுதல் விலையைக் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

Article Published On: Wednesday, July 1, 2026, 9:20 [IST]
English summary
Tata sierra ev variant wise features explained what are the specials
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out