டாடா சியரா EV vs போட்டியாளர்கள்: குறைவான விலையில் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி எது?

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருந்த சியரா EV-யை இந்தியாவில் இன்று வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை முந்தைய கட்டுரையிலேயே பார்த்திருப்பீர்கள். தற்போது சியரா EV-க்கும் போட்டி கார்களுக்கு இடையேயான ஒப்பீட்டைப் பார்க்கலாம். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி e விட்டாரா, மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், எம்ஜி ZS EV உள்ளிட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாகவே சியரா EV வெளியாகியுள்ளது.

போட்டி கார்களில் என்ன பவர்ட்ரெயின் மற்றும் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது, அது எவ்வளவு ரேஞ்சைக் கொடுக்கிறது, என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, அதனுடன் ஒப்பிடும் போது டாடாவின் புதிய சியரா EV எலெக்ட்ரிக் காரில் இதே அம்சங்கள் எப்படியாக இருக்கின்றன என்ற ஒப்பீட்டை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

Tata Sierra EV

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்சு:

முதலில் டாடாவின் சியரா EV-யின் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்சு குறித்த தகவல்களைப் பார்த்து விடுவோம். புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் காரில் 63 kWh மற்றும் 75 kWh பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது டாடா மோட்டார். சிறிய பேட்டரி பேக்கானது 535 கிமீ வரையிலான ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 665 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

BE 6 எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது மஹிந்திரா. இந்த பேட்டரி பேக்குகளானது முறையே 557 கிமீ மற்றும் 683 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சினைக் கொண்டிருக்கின்றன. e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவியில் சிறிய 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி பேக்குகளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை 440 கிமீ மற்றும் 543 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளன.

Tata Sierra EV backside

கிரெட்டா எலெக்ட்ரிக் காரிலும் சிறிய 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி பேக் தேர்வுகளே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பேட்டரி பேக்குகளானது முறையே 420 கிமீ மற்றும் 510 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளன. ZS EV எஸ்யூவியானது 460 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய 50.3 kWh என்ற பேட்டரி பேக் தேர்வை மட்டுமே கொண்டுள்ளது.

சார்ஜிங் நேரம்:

120 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி சியரா EV-யின் பேட்டரி பேக்கை 20-80 சதவீதம் வரை 26 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும் எனத் தெரிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். இதுவே 7.2 kW AC சார்ஜரைப் பயன்படுத்தினால் சிறிய பேட்டரி பேக்கை 10-100 சதவீதம் வரை 8.9 மணி நேரத்திலும், பெரிய பேட்டரி பேக்கை 10.5 மணி நேரத்திலும் சார்ஜ் செய்து விட முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

சார்ஜிங் நேரத்திலும் சியரா EV-க்கு வலுவான போட்டியளிப்பது மஹிந்திரவின் BE 6 தான். அதன் பேட்டரியை DC ஃபாஸ்ட் சார்ஜப் மூலமாக 20-80 சதவீதம் வரை 20 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது மஹிந்திரா. இதுவே 11.2 kW AC சார்ஜரைப் பயன்படுத்தினால் சிறிய பேட்டரியை 6 மணி நேரத்திலும், பெரிய பேட்டரியை 8 மணி நேரத்திலும் சார்ஜ் செய்து விட முடியும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மாருதி e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவியை 70 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 10-80 சதவீதம் வரை 45 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும், 7.4 kW AC சார்ஜரைப் பயன்படுத்தும் போது, சிறிய மற்றும் பெரிய பேட்டரி பேக்குகளை முறையே 6.5 மணி நேரம் மற்றும் 9 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விட முடியும்.

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் காரை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10-80 சதவீதம் வரை 39 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும் எனத் தெரிவித்துள்ளது ஹூண்டாய். இதுவே 11 kW AC பாக்ஸ் சார்ஜரைப் பயன்படுத்தும் போது சிறிய பேட்டரி பேக்கை 10-100 சதவீதம் வரை 4 மணி நேரத்திலும், பெரிய பேட்டரி பேக்கை 4.50 மணி நேரத்திலும் சார்ஜ் செய்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ZS EV-யின் ஒரே பேட்டரி பேக்கை, 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 0-80 சதவீதம் வரை 1 மணி நேரத்திலும், 7.4 kW AC சார்ஜரைப் பயன்படுத்தி, 0-100 சதவீதம் வரை 9 மணி நேரத்திலும் சார்ஜ் செய்துவிட முடியும் என எம்ஜி மோட்டார் குறிப்பிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்:

சியரா EV-யின் 63 kWh பேட்டரி பேக்குடன் 238 hp பவர் மற்றும் 315 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும், 75 kWh பேட்டரி பேக்குடன் 209 hp பவர் மற்றும் 315 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் காரின் பின்பக்க வீலுடன் இணைக்கப்பட்டுள்ளது. 75 kWh பேட்டரி பேக் தேர்வுடன் குவாடு வீல் டிரைவ் வசதியும் கொடுக்கப்படுகிறது.

குவாடு வீல் டிரைவ் இந்த வேரியன்டில் கூடுதலாக 140 hp பவரை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் முன்பக்க வீலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 504 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை சியரா EV குவாடு வீல் டிரைவ் வேரியன்ட் கொண்டுள்ளது.

மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் காரின் 59 kWh பேட்டரி பேக்குடன் 228 hp பவர் மற்றும் 380 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே 79 kWh பேட்டரி பேக் தேர்வுடன் 282 hp பவர் மற்றும் 380 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட செட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மாருதியின் மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியான e விட்டாராவில் 49 kWh பேட்டரி பேக்குடன் 142 hp பவர் மற்றும் 193 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும், 61 kWh பேட்டரி பேக்குடன் 172 hp பவர் மற்றும் 193 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஹூண்டாயின் கிரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவியில், 42 kWh பேட்டரி பேக்குடன் 133 hp பவர் மற்றும் 255 Nm டார்க்கையும், 51.4 kWh பேட்டரி பேக்குடன் 169 hp பவர் மற்றும் 255 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகளை அந்நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. எம்ஜி ZS EV-யில், 177 hp பவர் மற்றும் 280 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை:

டாடா சியரா EV-யின் சிறிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டானது 18.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டானது 22.19 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்குகிறது. குவாடு வீல் டிரைவ் வசதி கொண்ட வேரியன்ட் 25.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இது தான் விலை உயர்ந்த டாப் எண்டு வேரியன்டும் கூட.

மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் சிறிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டின் விலை 18.90 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டின் விலை 23.50 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்குகிறது.

மாருதி e விட்டாரா சிறிய பேட்டரி பேக் வேரியன்டின் விலை 15.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், பெரிய பேட்டரி பேக் வேரியன்டின் விலை 17.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்குகிறது. இதில் பெரிய பேட்டரி பேக்கே சியரா EV-யின் சிறிய பேட்டரி பேக்கை விட சற்று சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் காரின் சிறிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டின் விலை 18.03 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்டி விலை 20 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்குகிறது. எம்ஜி ZS EV காரானது 17.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

முக்கியமான இந்த நான்கு அம்சங்களை ஒப்பிடும் போதே, சியரா EV-க்கு நேரடிப் போட்டியாளர் மஹிந்திராவின் BE 6 தான் என்பதை தெளிவாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. சியரா EV-க்கு மாற்றாக வேறொரு காரை நாம் பரிசீலனை செய்யலாம் என்றால் அது மாருதியின் e விட்டாரா தான். அதன் பேட்டரி பேக் சிறியது, ரேஞ்சு சற்று குறைவு தான் என்றாலும், அதற்கேற்ற வகையிலும் விலையும் குறைவாகவே இருக்கிறது.

மேலும், e விட்டாராவை BaaS திட்டத்தின் கீழ் இன்னும் குறைவாக 10.99 லட்சம் ரூபாய் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலைக்கே நாம் வாங்கலாம். ஹூண்டாய் கிரெட்டா, ZS EV ஆகிய கார்கள் சியரா EV-யை விட மிகவும் சிறிய பேட்டரி பேக்குகளைக் கொண்டிருப்பதோடு, விலையும் சியரா EV-க்கு மிக நெருக்கத்தில் உள்ளது. ஒப்பீட்டின் படி பார்த்தால் வாங்கும் முடிவில் அந்த இரண்டு கார்களையும் நாம் ஒமிட் செய்ய வேண்டும்.

இறுதியாக இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இங்க இரண்டு பேருக்கு இடையில தான் போட்டியே. ஒன்று டாடா சியரா EV, இன்னொன்னு மஹிந்திரா BE 6. மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களில் எந்த காருமே விற்பனையில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதால் சியரா EV-க்கு இந்திய சந்தையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது.

Article Published On: Tuesday, June 30, 2026, 20:21 [IST]
English summary
Tata sierra ev vs other midsize suvs battery range powertrain and price comparison
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out