டாடா சியரா டர்போ பெட்ரோல் இன்ஜின் இவ்வளவு மைலேஜ் கொடுக்குதா?

தங்களது மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான சியராவில் மூன்று இன்ஜின் தேர்வுகளை டாடா கொடுத்துள்ளது. 1.5 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகிய மூன்று இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளத. இதில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பல ஆண்டுகளாக டாடாவின் மற்ற கார் மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினோ அந்நிறுவனம் முற்றிலும் புதிதாக உருவாக்கியது.

இப்போது இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினின் மைலேஜ் குறித்த விவரங்களையே நாம் இங்கே பார்க்கப் போகிறோம். இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினே டாடா ஒரிஜினலாக உருவாக்கிய ஒரு இன்ஜின். இதன் அடிப்படையில், குறைவான விலை கொண்ட வேரியன்ட்களில் பயன்படுத்துவதற்காக 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினை அதன் பிறகு டாடா உருவாக்கியது என்பது இங்கே கொசுறுத் தகவல்.

Tata Sierra

டாடாவின் இந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 160 hp பவர் மற்றும் 255 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே டாடா கொடுத்துள்ளது.

ஒரு காரில், அதுவும் பெர்ஃபாமன்ஸ் காரில் கூடுதல் மைலேஜ் பெறுவதற்காக சில அம்சங்களை நிறுவனங்கள் கொடுக்கும். ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்/ ஸ்டாப், எகோ டிரைவிங் மோடு ஆகியவை அதில் சில. ஆனால் அப்படி எந்த அம்சங்களையும் இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட சியராவில் டாடா கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காரில் சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகளை மட்டுமே அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது.

Tata Sierra Back

சரி இப்போது மைலேஜ் விவரங்களைப் பார்க்கலாம். நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட சியரா லிட்டருக்கு வெறு்ம 6 கிமீ முதல் 7 கிமீ வரையிலான மைலேஜையே கொடுக்கிறது. ஆனால் நெடுஞ்சாலைகளில் இந்த இன்ஜின் கொஞ்சம் கூடுதல் மைலேஜ் கொடுக்கிறது. நகரங்களில் கொடுப்பதை விட விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாக லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.

நெடுஞ்சாலைகளையும், நகரச்சாலைகளையும் சேர்த்தப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சராசரியாக லிட்டருக்கு 9 கிமீ முதல் 11 கிமீ வரையிலான மைலேஜைப் பெறலாம். அதிகளவிலான நெடுஞ்சாலைப் பயணங்களை சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் சியரா டர்போ பெட்ரோல் இன்ஜினில் இருந்து அதிகளவிலான மைலேஜைப் பெற முடியும். நகரப் பயன்பாட்டிற்காக இந்தக் காரை வாங்குபவர்கள் டர்போ பெட்ரோல் இன்ஜின் வேண்டுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

இது ARAI குறிப்பிடும் மைலேஜ் அளவ அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ARAI குறிப்பிடும் மைலேஜ் அளவில் இருந்து நாம் தினசரி பயன்பாட்டின் போது கிடைக்கும் மைலேஜ மிகவும் குறைவாகவே இருக்கும்.மேலே குறிப்பிட்டிருப்பது நாம் தினசரி பயன்படுத்தும் போது கிடைக்கும் உண்மையான மைலேஜ் அளவுகள் தான். சியரா டர்போ பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 15.30 கிமீ மைலேஜ் கொடுக்கும் என ARAI அமைப்பு கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டர்போ பெட்ரோல் இன்ஜின் வேண்டும் என்று விரும்புபவர்கள் மைலேஜிற்காக அதனை விரும்பியிருக்க மாட்டார்கள். எனினும் நகரத்திற்குள் டர்போ பெட்ரோல் இன்ஜினின் முழுமையான பெர்ஃபாமன்ஸை நாம் பயன்படுத்த முடியாது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப இங்கே முடிவெடுத்துக் கொள்ளலாம். சியரா லைன்-அப்பில் உயர்நிலை வேரியன்டில் மட்டுமே இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை டாடா கொடுத்திருக்கிறது. ரூ.17.99 லட்சம் முதல் ரூ.20.99 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இதனை வாங்கலாம்.

Article Published On: Sunday, April 26, 2026, 16:01 [IST]
English summary
Tata sierra mid size suv turbo petrol engine mileage figures check all details here
மேலும்... #tata motors #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+