லிட்டருக்கு 18.8கிமீ மைலேஜ் தரும் டாடா கார்! விற்பனைக்கு வந்த சமயத்தில் 25கிமீ-னு சொன்னாங்களே...!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய சியரா (Sierra) கார் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த காருக்கு ஆர்வம் உள்ளது என்றால், புதிய சியராவின் மைலேஜ் (Mileage) விபரங்களை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். அதுகுறித்த விபரங்களை டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் மூலமாக சியராவின் மைலேஜ் விபரங்கள் தெரிய வந்துள்ளன. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த 1990ஆம் காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த கார்களுள் ஒன்று, சியரா ஆகும். இதனாலேயே அதே பெயரில் சியரா காரை மீண்டும் டாடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சியரா காரின் டெலிவிரிகள் (Deliveries) கடந்த ஜனவரி மாதத்தில் துவங்கப்பட்டன.

இந்த நிலையில், ARAI-ஆல் சான்றளிக்கப்பட்ட சியராவின் மைலேஜ் விபரங்கள் வெளியாகி உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கிடைத்துள்ள இந்த விபரங்களின்படி, சியராவின் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் ARAI மைலேஜ் விபரங்கள் நமக்கு தெரியவந்துள்ளன. இந்த விபரங்களை 'வஹான் வர்தா' (Vahan Warta) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த எக்ஸ் பதிவின்படி பார்க்கும்போது, 1.5 லிட்டர் TGDi ஹைபீரியன் பெட்ரோல் என்ஜின் உடன் புதிய சியராவில் லிட்டருக்கு அதிகப்பட்சமாக 13.5கிமீ வரையில் மைலேஜ் பெறலாம். அதுவே, 1.5 லிட்டர் க்றையோஜெட் டீசல் என்ஜின் உடன் 18.8கிமீ வரையில் மைலேஜ் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட்களில் வழங்கப்படும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினில் எவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

வஹான் வர்தாவின் எக்ஸ் பதிவின்படி பார்க்கும்போது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டாடா சியராவின் மைலேஜ் குறித்த விபரங்களை அறிவதற்கான மனு 2025 நவம்பர் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, விபரங்கள் வழங்கப்பட்டு அந்த மனு 2025ஆம் வருடத்திலேயே டிசம்பர் 19இல் முடித்து வைக்கப்பட்டது.
மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள நாட்ரக்ஸ் (Natrax) சோதனை களத்தில் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 29.9கிமீ மைலேஜ் சஃபாரியில் எட்டப்பட்டதாகவும் வஹான் வர்தாவின் இந்த எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நாட்ரக்ஸில் ஓட்டிப் பார்க்கப்பட்ட போது புதிய சஃபாரி லிட்டருக்கு 25கிமீ மைலேஜ் வழங்கியதாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த சோதனையில், புதிய 1.5 லிட்டர் ஹைபீரியன் டர்போ-ஜிடிஐ என்ஜினை சஃபாரி கார் கொண்டிருந்தது. அந்த சோதனையில் அதிகப்பட்சமாக மணிக்கு 216கிமீ வேகத்தில் சஃபாரி கார் ஓட்டி பார்க்கப்பட்டது. டாடா சஃபாரி மொத்தம் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் ரெவோட்ரான் என்ஜின் முக்கியமானது ஆகும்.
சஃபாரியின் விலை குறைவான வேரியண்ட்களில் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 106 பிஎஸ் மற்றும் 145 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிபடுத்தக்கூடியதாக உள்ளது. விலைமிக்க பெட்ரோல் வேரியண்ட்களில் வழங்கப்படும் 1.5 லிட்டர் ஹைபீரியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 பிஎஸ் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது ஆகும். இவை இல்லாமல், 1.5 லிட்டர் க்றையோஜெட் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் இந்த கார் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தி இருக்கும் டாடா சஃபாரி காரின் முதல் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரங்களாக இது வெளியாகி உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இதுகுறித்து இன்னும் எந்த விபரமும் வெளியாகவில்லை என்றாலும், இதனை நம்பகமான மைலேஜ் விபரங்களாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த மைலேஜ் புள்ளி விபரங்கள் அனைத்தும் ARAI-ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளன.
Source: Vahan Warta via X


Click it and Unblock the Notifications








