அம்பானியாவே இருந்தாலும் இந்த டாடா காரை டெலிவரி எடுக்கணும்னா 3 மாசம் தவம் கெடக்கணும்! 'டிமாண்ட்' எகிறுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய டாடா சியரா (Tata Sierra), கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய டாடா சியரா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஜனவரி 15ம் தேதி தொடங்கியது.

இந்த சூழலில் டாடா சியரா காரின் காத்திருப்பு காலம் (Waiting Period) குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார்வாலே தளத்தில் தற்போது வெளியாகியுள்ள செய்தியின்படி பார்த்தால், புதிய டாடா சியரா காரை நீங்கள் வாங்க விரும்பினால், முன்பதிவு (Booking) செய்த நாளில் இருந்து, டெலிவரி பெறுவதற்கு அதிகபட்சமாக சுமார் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

New Tata Sierra

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களிலேயே தற்போது நீண்ட காத்திருப்பு காலத்தை கொண்டிருப்பது புதிய டாடா சியராதான் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டாடா சியரா காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்தை இந்த காத்திருப்பு காலம் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. டாடா சியரா காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புக்கிங் செய்து விட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் வேரியண்ட்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களை பொறுத்து, இந்த காத்திருப்பு காலம் மாறுபடலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே நீங்கள் வாங்க விரும்பும் வேரியண்ட் மற்றும் கலர் ஆப்ஷனின் துல்லியமான காத்திருப்பு காலத்தை அறிய, உங்களுக்கு அருகில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது.

Tata Sierra SUV

புதிய டாடா சியரா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். அத்துடன் ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) டாடா சியரா கொண்டுள்ளது.

இதில், 22 வசதிகள் உடன் கூடிய லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems), 75 வசதிகள் உடன் கூடிய ஐரா கனெக்டட் கார் தொகுப்பு போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் பனரோமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற வசதிகளையும், புதிய டாடா சியரா கொண்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கு எல்லாம் டாடா சியரா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, February 5, 2026, 12:43 [IST]
English summary
Tata sierra waiting period up to 3 months check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+