விஜய் ஆட்சி முடியறதுக்குள்ள இது நடந்தே ஆகணும்! 35 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை தண்ணி போல் செலவழிக்கும் டாடா!
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை பங்கு (Market Share) சுமார் 13 சதவீதமாக உள்ளது. இதை வரும் 2030ம் ஆண்டிற்குள் 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா சன்ஸ் (Tata Sons) தலைவரான சந்திரசேகரன் (Chandrasekaran) கூற்றுப்படி, ஒரு ஆண்டிற்கு 60 லட்சம் கார்கள் விற்பனையாகும் சந்தையாக வரும் 2030ம் ஆண்டில் இந்தியா உருவெடுக்கும். இதில், 12 லட்சம் கார்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது. அதாவது 20 சதவீத கார்களை விற்பனை செய்ய வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாயை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. அத்துடன் ஏராளமான புதிய கார்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் கார் சந்தையில் 20 சதவீத சந்தை பங்கை கைப்பற்ற முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்புகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீப காலமாக தனது தயாரிப்புகளை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே வருகிறது. டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift) மற்றும் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift) ஆகிய கார்கள் முறையே நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் (Tata Tiago Facelift) மற்றும் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Tiago EV Facelift) கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இப்படி ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களை அப்டேட் செய்வதுடன், பல்வேறு புதிய மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு களமிறக்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா சியரா (Tata Sierra) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்னும் ஒரு சில மாதங்களில் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டில்தான் அதிக கவனம் செலுத்தவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
தற்போதைய நிலையில் டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகிய 2 கார்கள்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதுகெலும்பாக உள்ளன. கடந்த மே மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 20,208 பன்ச் கார்களையும், 19,100 நெக்ஸான் கார்களையும் விற்பனை செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2030ம் ஆண்டிற்குள் 20 சதவீத சந்தை பங்கு என்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இலக்கு, மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களுக்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications