வெறும் 4.50 லட்சம் ரூபாய் விலையில் அசரடிக்கும் மைலேஜ் கொடுக்கும் காரை அப்டேட் செய்யும் நிறுவனம்
குறைவான விலை கொண்ட டாடா கார் ஒன்றை வாங்க வேண்டும் என்றால் டியாகோ தான் ஒரே ஆப்ஷன். மிகவும் குறைவான விலையில் டாடாவின் தொடக்கநிலை காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டியாகோ. இந்தக் சிறிய ரக ஹேட்ச்பேக் காரை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது டாடா மோட்டார்ஸ்.
2025ம் ஆண்டு தான் டியாகோவை அப்டேட் செய்தது டாடா. தற்போது மீண்டும் சின்னச் சின்ன மேம்பாடுகளைக் கொடுக்கவிருக்கிறது. ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்ட டியாகோ காரை முழுவதுமாக மறைக்கப்பட்ட வகையில் இந்த சாலைகளில் சோதனை செய்யத் தொடங்கிவிட்டது அந்நிறுவனம். மேலும் இந்தக் அப்டேட் செய்யப்பட்ட டியாகோ ஃபேஸ்லிப்ட் காரை மே 28ம் தேதியன்று இந்தியாவில் வெளியிடவுள்ளது டாடா மோட்டார்ஸ். புதிய காரில் என்னென்னவெல்லாம் மாறவிருக்கிறது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போது கிடைத்த ஸ்பைஷாட் புகைப்படங்களை வைத்து புதிய 2026 டியாகோ ஃபேஸ்லிப்ட் காரின் வெளிப்புற டிசைனில் டாடா மோட்டார்ஸ் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதை ஓரளவு நாம் கணிக்க முடிகிறது. அந்த வகையில் முன்பக்கத்தில் முகப்பு விளக்குகள், இன்டிகேட்டர்கள் ஆகியவை புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பின்பக்கமும் புதிய விளக்குகள் கொண்ட செட்டப்பே எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கவாட்டில் புதிய டிசைனுடன் கூடிய அலாய் வீல்களை டியாகோ ஃபேஸ்லிப்டில் நாம் பார்க்கலாம். இதனைத் தவிர்த்து காரில் ஆங்காங்கே சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் உட்புறம் தற்போது இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், MID ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த வசதிகளுடன், நிறைய வசதிகள் தற்போதைய டியாகோ காரில் மிஸ்ஸாகவும் செய்கின்றன. அவற்றில் சில வசதிகளை புதிய காரில் டாடா கொடுக்கலாம். குறிப்பாக ரியர் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ரியர் ஆர்ம்ரெஸ்ட், ஃப்ரண்ட் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் ஏசி வென்ட்கள், 7 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளை டாடா கொடுக்கலாம். வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் கொடுக்கப்படுவதற்கான தேவை இருக்கிறது, ஆனால் டாடா கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.
இன்ஜினைப் பொறுத்தவரை தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் i-CNG டூயல் சிலிண்டர் கிட் கொண்ட CNG பவர்ட்ரெயின் ஆகியவை புதிய டியாகோ ஃபேஸ்லிப்ட் காரிலும் கொடுக்கப்பட்டிருக்கும். புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷனில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை டாடா கொடுக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்ட பன்ச் ஃபேஸ்லிப்டில் இந்தப் பவர்ட்ரெயினை டாடா மோட்டார்ஸ் புதிதாகக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மேம்பாடுகளுடன் தற்போது விற்பனை செய்யப்படுவதை விட சற்று கூடுதல் விலையில் புதிய 2026 டியாகோ ஃபேஸ்லிப்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 4.60 லட்சம் ரூபாய் முதல் 8.20 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 2025 டாடா டியாகோ பட்ஜெட் ஹேட்ச்பேக்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதிக்கு இணையாக குறைவான விலையில் சில கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்று இந்த டியாகோ ஹேட்ச்பேக். மாருதி செலரியோ, ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்டு i10 ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்த டியாகோவைக் கூறலாம். இந்த அப்டேட்டிற்கு பின்பு கூடுதல் வசதிகளுடன் 5 லட்சம் ரூபாய்க்கு உள்ளான தொடக்க விலையிலேயே இந்த டியாகோ ஃபேஸ்லிப்ட் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக கார் வாங்குபவர்கள் இந்த டியாகோவையும் பரிசீலனையில் வைத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications