வெறும் நாலரை லட்சத்துக்கு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்! டெலிவரி தொடங்கியதால் இந்தியா முழுக்க உற்சாகம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இது மிகவும் விலை குறைவான ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
தற்போது அதன் டெலிவரி (Delivery) பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர் ஒருவர் டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. chintan suthar vlogs என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில் ஒரு குடும்பத்தினர் பேங்யாங் பல்ஸ் நிற டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெலிவரி எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலானது மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். அவை பேங்யாங் பல்ஸ், ஷேபோ சர்ஜ், ப்யூர் க்ரே, டேடோனா க்ரே, ப்ரஸ்டீன் ஒயிட் மற்றும் டேராடூன் ட்யூ ஆகியவை ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh ஆகியவை ஆகும். இதில், 19.2 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 226 கிலோ மீட்டர் எனவும், 24 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 285 கிலோ மீட்டர் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 KW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த 2 பேட்டரிகளையும் வெறும் 35 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்னும் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.
இதில், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் வியூ மானிட்டர், ட்ராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், பின் பகுதியில் டீஃபாகர், ஃபாலோ மீ ஹோம் வசதியுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ், ஜிபிஎஸ் உடன் சுறா துடுப்பு ஆன்டெனா, க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் டெயில்கேட் போன்ற வசதிகளும், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரை நீங்கள் பாஸ் (BaaS) முறையிலும் வாங்கலாம். பாஸ் முறையில் வாங்கினால், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 4.69 லட்ச ரூபாய் மட்டுமே.
ஆனால் இந்த முறையை தேர்வு செய்தால், நீங்கள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என நாங்கள் கருதுகிறோம். எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications