எந்த வேரியண்டை தேர்வு செய்தாலும் ரூ.10 லட்சத்திற்குள் விலை... டாடா உருவாக்கிய புதிய எலெக்ட்ரிக் கார்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் ஆனது ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுள் டியாகோ இவி-யும் ஒன்று என்பதால், அதற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. காரின் தோற்றத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதுடன், புதிய தொழிற்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ரூ.6.99 லட்சத்தில் இருந்து புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட், பியூர்+ மற்றும் கிரியேட்டீவ்+ என்கிற மூன்று வேரியண்ட்களில் புதிய டியாகோ இவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களையும், வசதிகளையும் பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஸ்மார்ட் (Smart): புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்டில் 14 இன்ச்சில் இரும்பு சக்கரங்களே கிடைக்கும். இருப்பினும், செண்ட்ரல் லாக்கிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் கால் தொடைக்கான சப்போர்ட் உடன் இருக்கைகளை பெறலாம்.
மேலும், 40க்கும் அதிகமான கனெக்டட் கார் வசதிகள் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரத்தையும் பெறும் டியாகோ இவி காரின் இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸில் காரை பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் ஹை-பீம் அலார்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பியூர்+ (Pure+): மேற்கூறப்பட்ட ஸ்மார்ட் வேரியண்ட்டை 19.2kWh பேட்டரி உடன் மட்டுமே வாங்க முடியும். ஆனால், பியூர்+ வேரியண்ட்டை 24kWh பேட்டரி உடனும் வாங்கலாம். பேட்டரியை பொறுத்து இந்த வேரியண்ட்டின் விலை ஆனது ரூ.1 லட்சம் வித்தியாசப்படுகிறது. இந்த வேரியண்ட்டிலும் 14-இன்ச் இரும்பு சக்கரங்கள் தான் வழங்கப்பட்டுள்ளன என்றாலும், சக்கரங்களுக்கு கவர்களை பெறலாம்.
மேலும், இந்த வேரியண்ட்டில் டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் ORVM-கள், GPS உடன் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, 65 வாட்ஸில் இரு USB சார்ஜிங் துளைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி உடன் 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை, கண்ட்ரோல்கள் உடன் ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் பவர் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவையும் கிடைக்கும்.
| Variant | Battery Pack | Price (Ex-showroom) | Claimed Range |
| Smart 19 | 19.2 kWh | Rs. 6.99 lakh | 226 km |
| Pure+ 19 | 19.2 kWh | Rs. 8.49 lakh | 226 km |
| Pure+ 24 | 24 kWh | Rs. 9.49 lakh | 285 km |
| Creative+ 24 | 24 kWh | Rs. 9.99 lakh | 285 km |
கிரியேட்டீவ்+ (Creative+): ஸ்மார்ட் வேரியண்ட்டை போன்று இதுவும் ஒரேயொரு பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அந்த பேட்டரி ஆப்ஷன் ஆனது அளவில் பெரியதான 24kWh பேட்டரி ஆகும். டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டான இது முன்பக்கத்தில் LED டிஆர்எல்-கள் மற்றும் LED ஹெட்லைட்கள் உடன் கிடைக்கும்.
இதன் சக்கரங்கள் 14-இன்ச்சில் நன்கு ஸ்டைலானதாக கிடைக்கும். மேலும், தன்னிச்சையாக மடங்கக்கூடிய ORVM-கள், பவர் டெயில்கேட், பாஸிவ் கீலெஸ் எண்ட்ரீ, க்ரூஸ் கண்ட்ரோல், டிரைவருக்கு அருகே ஒன்-டச் பவர் விண்டோ, மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், பின்பக்க விண்ட்ஷீல்டிற்கு வைபர் & வாஷர் மற்றும் பெரியளவில் 10.25-இன்ச்சில் எச்டி இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை போன்ற மாடர்ன் அம்சங்களை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த பேட்டரியுடன் வாங்க போகிறீர்கள் என்பதை பொறுத்துதான் வேரியண்ட்டை தீர்மானிக்க முடியும். பியூர்+ வேரியண்ட் மட்டும் இரு பேட்டரி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இருப்பினும், அனைத்து வேரியண்ட்களிலும் டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்குள் உள்ளன.


Click it and Unblock the Notifications