வெறும் 5 லட்சத்துக்கு புது எலெக்ட்ரிக் கார்! சிங்கிள் சார்ஜில் சென்னை-பெங்களூர் போகலாம்! மார்க்கெட் அதிருது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான அதே நேரத்தில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்றாகும்.
எனவே டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. இருப்பினும் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என்பதற்காக, அதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய சாலைகளில் தற்போது டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) குறித்த புதிய தகவல்கள் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளன.
தற்போது விற்பனையில் உள்ள டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh ஆகியவை ஆகும். இதில் 19.2 kWh டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 223 கிலோ மீட்டர்கள் ஆகவும், 24 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 293 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது.

ஆனால் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 19.2 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 24 kWh பேட்டரி ஆப்ஷன் தொடர்ந்து வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உடன் கூடுதலாக 30 kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்று வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இதன் டிரைவிங் ரேஞ்ச் 366 கிலோ மீட்டர்களாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன (இது கிட்டத்தட்ட சென்னை-பெங்களூர் இடையேயான தொலைவு ஆகும்). இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் வசதிகளை (Features) பொறுத்தவரையில், தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
அத்துடன் சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளையும், டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்படலாம் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை தற்போதைய நிலையில் வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை (Price) ஒரு சில ஆயிரங்கள் குறைவாகவோ அல்லது ஒரு சில ஆயிரங்கள் அதிகமாகவோ நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பாஸ் (BAAS - Battery As A Service) திட்டம் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை விலை வெறும் 5 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு சுமார் 3 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். எனினும் இந்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications