டியாகோ EV விலையே 4.69 லட்சம் ரூபாய் தான்.. இதுல 1.25 லட்சம் ரூபாய் சலுகையும் அறிவிச்சிருக்காங்களே!
டாடா நிறுவனமானது சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் டியாகோ EV-யின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் காரை வெளியிட்டது. இந்தப் புதிய அப்டேட்டுடன், இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் காராக மாறியிருக்கிறது டியாகோ EV. ஏனெனில் இந்தக் காருக்கு BaaS திட்டத்தையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. BaaS திட்டத்தின் கீழ் 4.69 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தற்போது புதிய டாடா டியாகோ EV காரை வீட்டிற்கு ஓட்டி வரலாம்.
புதிய கார் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய டியாகோ EV கார்களை விற்பனை செய்து தீர்க்கும் நோக்கத்துடன் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். குறைவான விலையில் டியாகோ EV காரை வாங்க வேண்டும் என நீங்கள் திட்டமிட்டிருந்தீர்கள் என்றால் அல்லது குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கு இது தான் சரியான நேரம்.

புதிய டியாகோ EV-யில் வேரியன்ட்களின் பெயர்களை எல்லாம் டாடா மோட்டார்ஸ் மாற்றிவிட்டது. ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய டியாகோ EV காரானது, XE, XT, XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் என நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதில் அடிப்படையான XE வேரியன்ட் 19.2 kWh என சிறிய பேட்டரி பேக்குடன் மட்டுமே கிடைக்கிறது. XT வேரியன்டானது இந்த சிறிய பேட்டரி பேக்குடன், 24 kWh என்ற பெரிய பேட்டரி பேக் தேர்வையும் கொண்டுள்ளது. மற்ற இரண்டு வேரியன்ட்களும் பெரிய பேட்டரி பேக்குடன் மட்டுமே கிடைக்கின்றன. குறிப்பு: கீழே இருக்கும் புகைப்படத்தில் இருப்பது தான் ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய டியாகோ EV.

ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய டியாகோ EV-யை 7.99 லட்சம் ரூபாய் முதல் 11.14 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்தக் காருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது. சிறிய பேட்டரி பேக் கொண்ட டியாகோ EV கார்களை (ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய வெர்ஷன்களை மட்டும்) 65,000 ரூபாய் வரையிலான சலுகைகளுடன் நாம் வாங்கலாம்.
பெரிய பேட்டரி பேக் கொண்ட ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய டியாகோ EV காரை அதிகபட்சமாக 1.25 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளுடன் இப்போது நாம் வாங்கலாம். இதில் கிரீன் போனஸ், எக்ஸ்சேஞ்சு போனஸ், ஸ்கிராப்பேஜ் போனஸ், லாயல்டி போனஸ் என அனைத்து வகைகளிலான சலுகைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகனங்களில் இருந்து நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறும் முதல் முறை கார் வாடிக்கையாளர் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இந்த டாடா டியாகோ EV தான் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கிறது.
எம்ஜி காமெட் இதே அளவிற்கு குறைவான விலையில் கிடைக்கிறது என்றாலும், முழுமையான காரின் அனுபவத்தை அது கொடுக்குமா என்பது சந்தேகம் தான். இதனை விட்டால் 10 லட்சம் ரூபாய் விலையில் பன்ச் EV இருக்கிறது. அதற்கும் BaaS திட்டத்தினை டாடா மோட்டார்ஸ் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டியாகோ EV-யின் விலையை டாடா மோட்டார்ஸ் குறைத்திருக்கிறது தான். ஆனால் ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய டியாகோ EV மாடலானது அதற்குரிய வைபைக் கொண்டிருந்தது. டிசைன் என்று வரும் போது ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய வெர்ஷனின் டிசைன் தான் எங்கள் சாய்ஸாக இருக்கும்.
அது தனி ப்ரீமியம்னஸைக் கொண்டிருக்கும். எனவே இந்த சலுகைகளுடன் தற்போதைய காரின் விலைக்கே ப்ரீமியமான முந்தைய காரை வாங்க முடியும். மேலும், பழைய ஸ்டாக்குகளை விற்றுத் தீர்க்க வேண்டிய தேவை இருக்கும் காரணத்தினால் மேலும் கூடுதல் சலுகைகளைக் கூட டீலர்ஷிப்களில் பேசி நீங்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications