மாருதி ஸ்விஃப்ட் வாங்கும் பிளானில் இருந்தவங்க எல்லாரும் இனி இந்த காரை வாங்க போறாங்க! டாடாவின் புது தயாரிப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் மே 28ஆம் தேதியான இன்று அதிகாரப்பூர்வமாக விலைகள் அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களாக விற்பனையில் இருக்கும் டியாகோ கார் கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டது. அதன்பின் தற்போதுதான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றுள்ளது.

டாடா டியாகோ காரில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களுள் ஒன்று காரின் வேரியண்ட்களின் பெயர்கள் மாற்றப்பட்டு இருப்பதாகும். எக்ஸ்இ, எக்ஸ்.எம், எக்ஸ்டி என்கிற பெயர்களில் இருந்த வேரியண்ட்கள் ஸ்மார்ட், பியூர், பியூர்+ உள்ளிட்ட பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிய பெயருக்கு மாற்றப்பட்டுள்ள வேரியண்ட்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன சிறப்பம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

tata tiago facelift variants-wise features

ஸ்மார்ட் (Smart): டியாகோவின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.4.67 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ட்ரி-லெவல் வேரியண்ட் என்பதால், மிகவும் அடிப்படையான வசதிகள் மட்டுமே இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்.

அதாவது, புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 2 ஏர்பேக்குகள் என்கிற பேச்சுக்கே இனி இடமில்லை. ஸ்மார்ட் வேரியண்ட்டில் பாதுகாப்பு அம்சங்களாக மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் முன்பக்கத்தில் பவர் விண்டோஸ் உள்ளிட்டவற்றை பெறலாம்.

tata tiago facelift variants-wise features

பியூர் (Pure): ஸ்மார்ட் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து அம்சங்கள் உடன் கூடுதலாக இந்த வேரியண்ட்டில் பகல்/ இரவு நேரத்திற்கு ஏற்ப தானாக அட்ஜெஸ் செய்துக் கொள்ளக்கூடிய IRV மிரர், 4 ஸ்பீக்கர்கள் உடன் ஸ்டாண்டர்டான 2-DIN மியுசிக் சிஸ்டம், பாதுகாப்புக்கு செண்ட்ரல் லாக்கிங் மற்றும் பின் இருக்கை வரிசையிலும் பவர் ஜன்னல் கண்ணாடிகளை பெறலாம்.

பியூர்+, பியூர்+ ஏ (Pure+, Pure+ A): இந்த இரு மிட்-லெவல் வேரியண்ட்களில் காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்கள் இரண்டும் லைட்பார் ஒன்றின் மூலமாக இணைக்கப்பட்டதாக கிடைக்கும். இத்துடன், ஆடியோ கண்ட்ரோல்கள் உடன் ஸ்டீயரிங் சக்கரம், கூல்டு க்ளோவ்பாக்ஸ் மற்றும் AMT கியர்பாக்ஸ் உடன் வாங்கினால் பிரீமியம் தரத்திலான சுழற்றக்கூடிய டயல் கியர் செலெக்டர் உள்ளிட்டவற்றை பெறலாம்.

கிரியேட்டீவ் (Creative): இந்த வேரியண்ட்டில் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை பிரீமியம் தரத்திலான தோற்றத்தில் பெறலாம். இதற்கேற்ப LED ஹெட்லைட்கள், 15-இன்ச் அலாய் சக்கரங்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி உடன் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி உள்ளிட்டவை இந்த வேரியண்ட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

கிரியேட்டீவ்+ (Creative+): டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை அல்ட்ரா-பிரீமியம் தரத்தில் பெறுவதற்கு இந்த டாப் வேரியண்ட்டில் வாங்கலாம். அந்த அளவிற்கு, 360-டிகிரி கேமரா, ட்யூயல் வயர்லெஸ் போன் சார்ஜிங் பேட்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கினால் ஸ்டீயரிங் சக்கரத்தில் பெடில் ஷிஃப்டர்கள் உள்ளிட்ட பிரீமியம் தரத்திலான அம்சங்கள் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ கார் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றிருந்தாலும், வாடிக்கையாளர்களை பெருமளவிற்கு ஈர்க்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் கூட இன்றைய கால மாடர்ன் அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன. விலையுயர்ந்த கிரியேட்டீவ்+ வேரியண்ட்டின் விலை ரூ.7.29 லட்சம் மட்டுமே ஆகும்.

Article Published On: Thursday, May 28, 2026, 16:43 [IST]
English summary
Tata tiago facelift car variants wise features list check all details here
மேலும்... #tata motors #tiago #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out