வெறும் 4.75 லட்சத்துக்கு புதிய காரை களமிறக்கும் டாடா... மாருதி ஸ்விஃப்ட் சகாப்தம் நாளையோட முடிஞ்சுது...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், நாளை (மே 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களாகவே டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் டீசர்களை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய ஒரு சில தகவல்கள் நமக்கு தற்போதே அதிகாரப்பூர்வமாக தெரிந்து விட்டன.

Tata Tiago Facelift Interior

டிசைன் (Design): டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன் பகுதியில், புதிய ஹெட்லைட்கள், கண் புருவ வடிவில் எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய பனி விளக்குகள், புதிய பம்பர்கள் மற்றும் புதிய க்ரில் அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக டிசைன் செய்யப்பட்ட 15 இன்ச் அலாய் வீல்களையும் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது.

அத்துடன் பின் பகுதியில் கனெக்டட் எல்இடி டெயில்லேம்பகளும் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தவிர புதிய கலர் ஆப்ஷன்களையும் (Colour Options), டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் டிசைனை தற்போது வெகுவாக மேம்படுத்தியுள்ளது. எனவே டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பது உறுதி.

Tata Tiago Facelift

வசதிகள் (Features): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களில் தற்போது 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தற்போது 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஃப்ளோட்டிங் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றையும், டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது.

இவை எல்லாம் தவிர, டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 2 டிவைஸ்களுக்கு வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜின் ஆப்ஷன் (Engine Option): டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் + சிஎன்ஜி என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இந்த 2 இன்ஜின்களுடனும், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படவுள்ளன. இதில், ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன், பேடில் ஷிஃப்டர்கள் வசதி வழங்கப்படவுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை (Expected Price): இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.60 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.75-5 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களுக்கு எல்லாம், டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

Article Published On: Wednesday, May 27, 2026, 14:02 [IST]
English summary
Tata tiago facelift hatchback launch tomorrow expected price features engine options rivals
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out