ஹூண்டாய் காரின் முக்கால்வாசி விலையில் கிடைக்கும் புதிய டாடா கார்! இரண்டும் ஒன்றுக்கொன்று சளைச்சது இல்ல!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் டியாகோ காருக்கு போட்டியாக இருக்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், வேகன்ஆர் உள்ளிட்ட பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கும் போட்டியாக விளங்கவுள்ளன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் காரும் போட்டியாக உள்ளது. இந்த ஹூண்டாய் காரில் இருந்து டியாகோ ஃபேஸ்லிஃப்ட் எந்த அளவிற்கு சிறந்ததாக உள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தோற்றம்: புதிய டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாடர்னான டிசைனை பெற்றுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் குறிப்பாக காரின் முகப்பு பகுதி பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதி கூட மாற்றப்பட்டுள்ளதால், புதிய டியாகோ கார் மைக்ரோ-எஸ்யூவி கிராஸ்ஓவர் தோற்றத்தை பெற்றுள்ளது.

மறுபக்கம், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் ஆனது கொரியன் பிராண்டில் இருந்து வந்திருந்தாலும் ஐரோப்பியன் ஹேட்ச்பேக் கார் ஸ்டைலை கொண்டுள்ளது. இந்த காரின் முன்பக்கத்தில் க்ரில் ஆனது சற்று தாழ்வாக வழங்கப்படுகிறது. டியாகோவை போன்று இந்த ஹூண்டாய் காரிலும் 15 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
என்ஜின்: புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் அதன் வழக்கமான 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அதுவே, டியாகோ CNG காரில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாகவே 75.5 பிஎஸ் மற்றும் 96.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையே வெளிப்படுத்தும்.

| Specs | Tata Tiago Petrol / CNG | Hyundai Grand i10 Nios Petrol / CNG |
| Engine | 1.2L Bi-fuel | 1.2-litre 4-Cyl Petrol |
| Power | 86 PS / 75.5 PS | 83 PS / 69 PS |
| Torque | 113 Nm / 96.5 Nm | 113.8 Nm / 95.2 Nm |
| Transmission | 5MT / AMT | 5MT / AMT |
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113.8 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. டியாகோ CNG காருக்கு போட்டியாக கிராண்ட் ஐ10 நியோஸ் CNG காரும் விற்பனை செய்யப்படுகிறது. அதில் கிடைக்கும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் 69 பிஎஸ் மற்றும் 95.2 என்.எம் டார்க் திறன் ஆகும்.
தொழிற்நுட்ப அம்சங்கள்: டாடா டியாகோவில் 10.25-இன்ச் எச்டி இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை, பல்வேறு 3டி/ 2டி வியூஸ் உடன் 360-டிகிரி கேமரா, டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, பாசிவ் எண்ட்ரி & பாசிவ் ஸ்டார்ட் (PEPS), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, ஸ்டோரேஜ் உடன் துணியால் அலங்கரிப்பட்ட முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் 3.5-இன்ச் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை, ஸ்மார்ட்போன் வாயிலாக பயணத்திற்கான வழி, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் மூலம் சில கண்ட்ரோல்களை கட்டுப்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
விலை: புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பெட்ரோல் வெர்சனில் ரூ.4.69 லட்சத்தில் இருந்து ரூ.7.29 லட்சம் வரையிலும், CNG ஆப்ஷனில் ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.7.99 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆனது பெட்ரோல் வெர்சனில் ரூ.5.55 லட்சத்தில் இருந்து ரூ.8.03 லட்சம் வரையிலான விலையிலும், CNG ஆப்ஷனில் ரூ.7.22 லட்சத்தில் இருந்து ரூ.7.72 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது.
| Price (Ex-Showroom) | Tata Tiago Petrol | Hyundai Grand i10 Nios Petrol | Tata Tiago CNG | Hyundai Grand i10 Nios CNG |
| Base Model | Rs 4.69 lakh | Rs 5.55 lakh | Rs 5.79 lakh | Rs 7.22 lakh |
| Top Model | Rs 7.29 lakh | Rs 8.03 lakh | Rs 7.99 lakh | Rs 7.72 lakh |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் இவை இரண்டுமே இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள் ஆகும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்வது உண்மையில் சிரமமான காரியமே. இருப்பினும், இந்த தொகுப்பின் மூலம் இந்த இரு கார்களில் எதை வாங்குவது என்கிற தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications