விலைய குறைச்சாச்சு.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்.. எல்லாரும் துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடப் போறாங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காரை ஒரு வடிவில் மட்டும் விற்பனை செய்யாது. பெட்ரோல், டீசல், CNG மற்றும் எலெக்ட்ரிக் எனப் பல வடிவில் விற்பனை செய்யும். அப்படி விற்பனை செய்யும் கார்களில் ஒன்று தான் டியாகோ (Tiago) ஹேட்ச்பேக். இது மிகவும் விலை குறைவான கார் என்பதால் டீசல் இன்ஜின் மட்டும் கிடையாது. பெட்ரோல், CNG மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய மற்ற மூன்று பவர்ட்ரெயின்களும் உண்டு.

இந்தக் காரின் ஏப்ரல் மாத விற்பனை குறித்த தகவல்கள் தற்போது நமக்குக் கிடைத்திருக்கின்றன. அது குறித்த விரிவான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம். ஹேட்ச்பேக் கிங்கான மாருதிக்கு சவால் விடும் டியாகோ ஏப்ரல் மாதம் எவ்வளவு விற்பனயாகியிருக்கிறது என்பதைப் பார்க்க உங்களை விட நாங்களும் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். வாங்க பார்க்கலாம்.

2026 Tata Tiago EV

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி படி கடந்த 2026 ஏப்ரல் மாதம் இந்தியாவில் 5,488 டியாகோ கார்களை டாடா விற்பனை செய்திருக்கிறது. இது பெட்ரோல், CNG மற்றும் எலெக்ட்ரிக் அனைத்தும் சேர்ந்த விற்பனை அளவு தான். ஆனால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஒப்பிடும் போது விற்பனை குறைந்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம், அதாவது 2025 ஏப்ரலில் சுமார் 8,277 டியாகோ கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருக்கிறது.

ஆனால் 2026 ஏப்ரலில் அந்த அளவு 34 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. டியாகோவின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் மாடலை சில வாரங்களக்கு முன்பு தான் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். எனவே புதிய மாடலை வாங்கும் பொருட்டு கூட ஏப்ரல் மாதம் டியாகோவின் விற்பனை குறைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 Tata Tiago

அதற்கு முன்னதாக 2026 மார்ச் மாதம் கூட 7,119 டியாகோ கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போதும் ஏப்ரல் மாத விற்பனை அளவு 23 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. 2025 மார்ச் மாதம் 7,946 டியாகோ கார்களை இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை விற்பனை குறைந்திருந்தாலும் இனி வரும் மாதங்களில் டியாகோவை அதிக வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனினில் டியாகோ EV காரின் விலையை டாடா மோட்டார்ஸ் குறைத்திருப்பதுடன், அனைத்து பவர்ட்ரெயின் கொண்ட மாடல்களையும் புதிய அம்சங்கள் மற்றும் டிசைனுடன் மேம்படுத்தியிருக்கிறது.

டியாகோ EV-யின் விலையை கொஞ்சமாக இல்லை, முழுவதுமாக 1 லட்சம் வரை குறைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். மேலும் தற்போது இந்தியாவில் மிகவும் குறைவான விலையைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் என்றால் அது டியாகோ EV தான். எனவே எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் கொண்ட டியாகோ கார், அதன் ஒட்டுமொத்த விற்பனைக்கு கூடுதலாக சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலையில் விற்பனையாவதுடன், சிறப்பான மைலேஜ் தரும் காராகவும் டியாகோ இருந்து வருகிறது. மிகவும் பாதுகாப்பான கார் என்பதை நாம் தனியாகக் கூறத் தேவையில்லை. டியாகோ பெட்ரோல் காரை 4.69 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கியும், CNG காரை 5.79 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கியும் நாம் வாங்கலாம். எலெக்ட்ரிக் டியாகோ காரை 6.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. BaaS திட்டத்தின் கீழ் 4.69 லட்சம் ரூபாய் என்ற விலைக்கே வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முந்தைய காருடன் ஒப்பிடும் போது புதிய டியாகோ கார் சிறப்பாகவே இருக்கிறது. நிறைய இடங்களில் புதிய காரை டாடா மெருகேற்றியிருப்பதுடன், வசதிகள் அளவிலும் மற்ற சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களை விட டியாகோவை ஒருபடி மேலே கொண்டு சென்றிருக்கிறது. பாதுகாப்பில் எப்போது மாருதியை விட டாடாவின் கார்கள் ஒருபடி மேல் தான். அதற்கு டியாகோவும் விதிவிலக்கல்ல.

சில இடங்களில் டியாகோவை இன்னும் டாடா மேம்படுத்தலாம் தான். குறிப்பாக பில்ட் குவாலிட்டி மற்றும் NVH அளவுகள் ஆகிய இடங்களில். ஆனால் இருசக்கர வாகனத்தில் இருந்து குடும்பமாக பயணிக்க புதிய காருக்கு மாற வேண்டும் என்றால் கண்டிப்பாக டியாகோவை பரிசீலனை செய்யலாம். முழுவதுமாக ஒதுக்கும் அளவிற்கான கார் கிடையாது. எனவே வரும் மாதங்களில் இந்த குறைவான விலை ஹேட்ச்பேக் காரின் விற்பனை உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, June 6, 2026, 17:28 [IST]
English summary
Tata tiago sales report april 2026 will this hatchback car shine among others
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out