28 கிமீ மைலேஜ்! எமனே வந்தாலும் உங்க நிழலை கூட தொட முடியாது! வெறும் நாலரை லட்சத்துக்கு இப்படி ஒரு காரா!

இந்தியாவில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. ஹேட்ச்பேக் கார்கள் 5 பேர் பயணம் செய்ய கூடிய வகையில் 'காம்பேக்ட்' ஆக இருக்கும். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் அவற்றை எளிமையாக இயக்க முடியும்.

அத்துடன் ஹேட்ச்பேக் கார்களின் விலை மிகவும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் அவை அதிக மைலேஜ் வழங்க கூடியதாகவும் இருக்கும். இது போன்ற காரணங்களால்தான், ஹேட்ச்பேக் ரக கார்களை, இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக டாடா டியாகோ (Tata Tiago) ஹேட்ச்பேக் காருக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

Tata Tiago Front Seat

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா டியாகோ பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் டாடா டியாகோ கார், விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

டாடா டியாகோ காரின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), தற்போது AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், 5,826 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 5,006 டாடா டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Tata Tiago Side Design

அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 820 டாடா டியாகோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா டியாகோ கார், விற்பனையில் 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. டாடா டியாகோ கார், ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலையும் கூட வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி, முழு ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜினை பொறுத்தவரையில், அதன் சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொறுத்தவரையில், லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள் அதிகபட்சமாக 293 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்குகின்றன. இவை அராய் மைலேஜ் (ARAI Mileage) மற்றும் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. எனவே பாதுகாப்பிலும் இந்த கார் தலைசிறந்து விளங்குகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) போன்ற கார்களுக்கு எல்லாம், டாடா டியாகோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

அதே நேரத்தில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரானது, எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது. குறைவான விலையில், பாதுகாப்பான, அதே நேரத்தில் அதிக வசதிகள் நிறைந்த மற்றும் அதிக மைலேஜ்/ரேஞ்ச் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா டியாகோ மற்றும் டாடா டியாகோ இவி ஆகியவை மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, January 9, 2026, 13:53 [IST]
English summary
Tata tiago sales report december 2025 16 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+