பாதுகாக்கறதுல குல தெய்வம்! வெறும் நாலரை லட்சத்துக்கு புது டாடா கார்! எவ்ளோ டிராஃபிக் இருந்தாலும் ஈஸியா போகலாம்
இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 8,349 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 6,807 டாடா டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,542 டாடா டியாகோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா டியாகோ கார் விற்பனையில் 22.65 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா டியாகோ கருதப்படுகிறது.

நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள டாடா டியாகோ காரின் போட்டி மாடல்கள் எல்லாம் ஐசி இன்ஜின் வெர்ஷனில் மட்டுமே கிடைத்து வருகின்றன. ஆனால் டாடா டியாகோ காரானது, ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கிடைத்து வருகிறது. இது டாடா டியாகோ காரின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலையும் கூட வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டாடா டியாகோ கார் விலை குறைவானது என்பதால் மட்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இல்லை. கூடவே அதை கையாள்வதும் மிகவும் எளிமையான ஒரு விஷயம் என்பதால்தான், டாடா டியாகோ கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. டாடா டியாகோ காரின் 'டர்னிங் ரேடியஸ்' (Turning Radius) 4.9 மீட்டர்கள் ஆகும்.
இதன் மூலம் நெருக்கமான பகுதிகள் மற்றும் வளைவுகளில், டாடா டியாகோ காரை இயக்குவது மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் இயக்குவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் டாடா டியாகோ மிகவும் எளிமையான கார் ஆகும். இதன் காரணமாகவும் டாடா டியாகோ கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு பாதுகாப்பான ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ மிகவும் ஏற்றது. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில் டாடா டியாகோ கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








