கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்க போகும் டாடா! மாருதியின் 2 கார்கள் மார்க்கெட்ல இருந்தே காணாம போக போகுது!
இந்திய சந்தையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எஸ்யூவி ரக கார்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
அத்துடன் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை சேர்ந்த ஒரு சில கார்கள், பாதுகாப்பு இல்லாதவை என்ற கருத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ளது. இதுவும் இந்த செக்மெணட்டின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த டாடா டியாகோ (Tata Tiago) காரின் விற்பனை பெரும்பாலான மாதங்களில் மிகவும் சிறப்பாகவே இருந்து வருகிறது.

ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் டாடா டியாகோ காருக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் டாடா டியாகோ காரின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது. டாடா டியாகோ காரின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 7,119 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 7,946 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 827 டாடா டியாகோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 10.41 சதவீத வீழ்ச்சி ஆகும். டாடா டியாகோ கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 4.60 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலையும் கூட வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டாடா டியாகோ கார் மிகவும் விலை குறைவானது என்பதுடன், மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Tests) டாடா டியாகோ கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று அசத்தியுள்ளது.
விலை குறைவானது மற்றும் பாதுகாப்பானது போன்ற காரணங்களால்தான், டாடா டியாகோ காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. சரி, கடந்த மார்ச் மாதம் டாடா டியாகோ காரின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பது ஏன்? என நீங்கள் கேட்பது புரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பொதுவாக புதிய மாடல் வரப்போகிறது என்றால், பழைய மாடலின் விற்பனை குறையும். டாடா டியாகோ காரின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். டாடா டியாகோ காரின் புதிய மாடல் விற்பனைக்கு வரும் வரை தற்போது விற்பனையில் உள்ள மாடலின் விற்பனை வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ காரின் 2 வெர்ஷன்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வருகைக்கு பின்னர், அதன் விற்பனை எண்ணிக்கை உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. இது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற அதன் நேரடி போட்டி மாடல்களுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications