யாரும் ஏறெடுத்து கூட பாக்காத காரை பட்டி டிங்கரிங் பாத்து மக்கள் தலையில் கட்ட போகும் டாடா!
இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) தவிர, மற்ற பெரும்பாலான செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை தற்போது மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது. இதற்கு டாடா டிகோர் (Tata Tigor) காரும் விதிவிலக்கு அல்ல. இது சப்-4 மீட்டர் செடான் ரகத்தை சேர்ந்தது ஆகும்.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மிகவும் குறைவாக விற்பனையாகி கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக டாடா டிகோர் உள்ளது. எனவே இந்த காரின் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் தற்போது எடுக்க தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக டாடா டிகோர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனை (Design) பொறுத்தவரையில், புதிய க்ரில் அமைப்பு, புதிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் புதிய எல்இடி டெயில்லைட்கள், புதிய ஏர்டேம் உடன் முன் பகுதியில் புதிய பம்பர், பின் பகுதியிலும் ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர், பின் பகுதியின் மேலே எல்இடி பிரேக் லைட் போன்ற அம்சங்கள் எல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கலர் ஆப்ஷன்களை வழங்கும் எனவும், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் இடம்பெற்றிருக்கும் எனவும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசதிகளை (Features) பொறுத்தவரையில், 360 டிகிரி கேமரா மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் வேரியண்ட்களை பொறுத்து, 8.89 செமீ, 17.76 செமீ மற்றும் 26.03 செமீ என்ற அளவுகளில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் வசதியையும், டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் புதிதாக எதிர்பார்க்கலாம். தற்போது விற்பனையில் உள்ள டாடா டிகோர் காரில் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் வசதி கிடையாது. முன் மற்றும் பின் பகுதியில் A மற்றும் C சார்ஜிங் போர்ட் வசதி மட்டுமே இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் கூல்டு க்ளவ் பாக்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், முழு ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகளும், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம். தற்போது விற்பனையில் உள்ள டாடா டிகோர் காரில் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் என்ற வசதி கிடையாது. மேலும் தற்போதைய மாடலில் உள்ள மற்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம், டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் செயல்திறனில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள்தான் (Engine Options) ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படவுள்ளது. இந்த 2 இன்ஜின்கள் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box) வழங்கப்படும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கிடைக்கும் ஒரு சில சிஎன்ஜி/ஏஎம்டி கியர் பாக்ஸ் கார்களில் டாடா டிகோரும் ஒன்றும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஏஎம்டி வெர்ஷன்களில் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்படலாம் என்பதுதான் அது. இது நடக்கும்பட்சத்தில், இந்த செக்மெண்ட்டிலேயே பேடில் ஷிஃப்டர்கள் வசதியை கொண்டுள்ள முதல் கார் என்ற பெருமையை, டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் பெறும். இது போன்ற காரணங்களால் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் காரின் ஐசி இன்ஜின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் சேர்த்து, அதன் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என நாங்கள் கருதுகிறோம். தற்போதைய நிலையில் டாடா டிகோர் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை (Price) 5.55 லட்ச ரூபாயாக உள்ளது.
மறுபக்கம் டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட இதே விலையில்தான் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவேளை விலையை குறைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் டாடா பன்ச் மற்றும் டாடா டியாகோ போன்ற கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விலை நிர்ணயம் மட்டும் சரியாக செய்யப்பட்டால், டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
ஒரு இடத்தில் தவறுதலாக டியாகோ என குறிப்பிடப்பட்டிருந்தது, டிகோர் என சரியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications