டாடால இப்படி ஒரு கார் இருக்கறதே நிறைய பேருக்கு தெரியாது... நீங்க ரோட்ல எங்கயாச்சும் பாத்துருக்கீங்களா?

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு சில கார்களும் விற்பனையில் தடுமாறி வருகின்றன. இதற்கு டாடா டிகோர் (Tata Tigor) ஒரு உதாரணம். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா டிகோர் காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருவதற்கு இது செடான் ரகத்தை சேர்ந்தது என்பதும் ஒரு வகையில் காரணம் ஆகும்.

Tata Tigor

ஆம், இந்திய சந்தையில் சமீப காலமாக செடான் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) தவிர, செடான் ரகத்தை சேர்ந்த வேறு எந்தவொரு காரின் விற்பனை எண்ணிக்கையும் சிறப்பாக இல்லை. இதற்கு டாடா டிகோர் காரும் விதிவிலக்கு அல்ல.

டாடா டிகோர் காரின் கடந்த 2025-2026 நிதியாண்டிற்கான (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த 2025-2026 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 12,147 டாடா டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Suzuki Dzire Side Design

அதாவது ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,012 டாடா டிகோர் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதன் காரணமாக கடந்த 2025-2026 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 12,147 டாடா டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2024-2025 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 26.40 சதவீதம் குறைவாகும்.

டாடா டிகோர் காரானது ஐசி இன்ஜின் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் இங்கே கூறியுள்ள அனைத்துமே டாடா டிகோர் காரின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டிகோர் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 5.55 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) போன்ற செடான் ரக கார்களுக்கு எல்லாம் டாடா டிகோர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஒரே ஒரு செடான் ரக கார் டிகோர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 23:11 [IST]
English summary
Tata tigor sales report march 2026 26 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+