ஒரு கி.மீக்கு வெறும் 47 பைசா தான் செலவு! இவ்வளவு கம்மி பராமரிப்பு செலவில் செடான் காரா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டி போர்டு வாகன லைன் அப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்நிறுவனம் டிகோர் அடிப்படையிலான எக்ஸ்பிரஸ் என்ற பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த வாகனம் ரூ5.59 லட்சம் முதல் ரூ6.59 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஃப்ளீட் அடிப்படையிலான வாகன அணிவகுப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி தனது டிகோர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் என்ற பெட்ரோல் மற்றும் ட்வின் சிலிண்ட்ர் சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெட்ரோல் வேரியன்ட் ரூ5.59 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியன்ட் ரூ6.59 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

Tata Xpres

இந்த விலையால் ஃபிளீட் பிரிவில் குறைந்த விலை வாகனமாக இது விற்பனைக்கு வபந்துள்ளது. இந்த கார்களை டாடா மோர்டார்ஸ் நிறவனத்தின் ஃபிளீட் வாகனங்களை விற்பனவை செய்யும் டீலர்களிடம் மட்டுமே புக்கிங் செய்யமுடியும் என தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வாகனத்திலும் 1.2 லிட்டர் ரெவோட்டிரான் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சிஎன்ஜி வேரியன்டில் செக்மெண்டிலேயே முதன் முறையாக 70 லிட்டர் சிஎன்ஜி டேங்க் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 2 சிலிண்டர் கொண்ட சிஎன்ஜி டேங்க் வழங்கப்ப்டடள்ளது. அதிக சிஎன்ஜியை ஏற்றும் வகையில் இந்த சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 2 சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளதால் அதிக பூட் வசதி கிடைக்கிறது.

Tata Xpres

இதனால் பயணிகள் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியம். இதனால் வருமானணம் அதிகரிக்கும். இந்த காரின் பெட்ரோல் வேரியன்டில் 479 லிட்டர் பூட் வசதி வழங்கப்ப்டடுள்ளுது. இந்த காருக்கு டாடா நிறுவனம் 1 லட்சம் கி.மீ வரை வாரண்டியைவ ழங்குகிறது. இதை 5 ஆண்டுகள் அல்லது 1.80 லட்சம் கி.மீ வரை நீட்டித்துக்கொள்ள முடியும். இந்த காருக்கு பராமரிப்பு செலவு என பார்த்தால் ஒரு கி.மீக்கு ரூ0.47 தான் செலவாகும். கமர்ஷியல் பிரிவில் குறைவான செலவில் இயங்கும் செடான் கார் இது தான்.

இந்த கார் ஓலா, உபேர் போன்ற பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பதால் இந்த காரை வாங்கினால் தாராளமாக லாபம் சம்பாதிக்க முடியும். இன்றைய சிஎன்ஜி விலை மற்றும் அதனால் கிடைக்கும் மைலேஜ் பெட்ரோலை விட சிறப்பாக இருப்பதால் மக்கள் பலர் அந்த ரக காரை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இந்த கார் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். இதில் ஏற்கனவே இவி கார் இருக்கும் நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய வேரியன்ட்களும் கூடுதலாக சேர்ந்துள்ளது. இதில் நீங்கள் விரும்புவது பெட்ரோலா, சிஎன்ஜியா?

Tata Xpres

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிராவில் துறையில் இந்த கார் முக்கிய பங்கு வகிக்கும் சிஎன்ஜி போன்ற எரிபொருள் நிரம்பி அதிக தூரம் பயணிக்கும் ரக வாகனங்களுக்கு தற்போது வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த காருக்கான செம டிமார்ட் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 23, 2026, 14:10 [IST]
English summary
Tata xpres petrol cng launched price 5 59 lakh
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X