டெஸ்லா இதுக்கு இந்தியாவுக்கு வராமலேயே இருந்து இருக்கலாம்.... டெஸ்லா கார் வாங்கும் கனவை குழி தோண்டி புதைங்க!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு சில வருடங்களுக்கு முன் நுழைந்தது. உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமாக இருப்பினும், இந்திய சந்தையில் நுழைவதா அல்லது வேண்டாமா என கிட்டத்தட்ட 10 வருடங்களாக டெஸ்லா ஆலோசித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் போது சிலமுறை டெஸ்லா CEO எலான் மஸ்க்கை நேரில் சந்தித்துக் கூட பேசினார்.

அதன் விளைவாகவே, 2024ஆம் ஆண்டில் ஒருவழியாக டெஸ்லா இந்திய சந்தையில் கால் பதித்தது. இருப்பினும், ஒரு கேள்விக்கான பதில் கிடைக்காமல் இருந்த வந்த நிலையில், தற்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கேள்வி என்னவென்றால், இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலையை டெஸ்லா நிறுவுமா என்பதாகும்.

tesla manufacturing plans for india

இந்திய சந்தைக்குள் நுழைவதற்கு டெஸ்லா நீண்ட வருடங்களாக யோசித்ததற்கு முக்கிய காரணமே, இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுமாறு டெஸ்லாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால் தான். இந்தியாவில் ஆலையை அமைத்தால், கார்களை அரசாங்க மானியத்துடன் குறைந்த விலையில் விற்க முடியும் இல்லையென்றால் இறக்குமதி வரியினால் அதிக விலையில் விற்க வேண்டியிருக்கும் என இரு ஆப்ஷன்களை டெஸ்லாவுக்கு மத்திய அரசு வழங்கியது.

இந்த இரண்டில் எந்த ஆப்ஷனை தேர்வு செய்வது என நீண்ட வருடங்களாக யோசித்து வந்த டெஸ்லா நிறுவனம், இப்போதைக்கு வெளிநாடுகளில் இருந்து கார்களை கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்வோம் என்கிற முடிவுக்கு வந்தது. இதனால்தான் இந்தியாவில் டெஸ்லா கார்களின் விலைகள் சற்று அதிகமாக உள்ளன.

tesla manufacturing plans for india

இதனை சமாளிக்க இந்தியாவில் டெஸ்லா ஆலை வர வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவும் திட்டத்தை டெஸ்லா முற்றிலுமாக கைவிட்டு விட்டதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், டெஸ்லா சார்பிலோ அல்லது மத்திய அரசு சார்பிலோ இதுகுறித்து எந்தவொரு அறிக்கையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

வெளிவந்துக் கொண்டிருக்கும் செய்திகளிலும் கடந்த 2025ஆம் ஆண்டின் மத்தியில் மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி அளித்த பேட்டிகளே இடம்பெற்றுள்ளன. மத்திய கனரக தொழில்துறை அமைச்சரான நிதின் கட்கரி, இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஆர்வத்தில் டெஸ்லா இல்லை என அப்போது தெரிவித்து இருந்தார். ஆனால், அப்போது இருந்த சூழலுக்கும், இப்போது உள்ள சூழலுக்கும் நிறைய வேறுப்பாடு உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்ற சூழல்களினால் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்துள்ளனர். ஆதலால், இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை டெஸ்லா மீண்டும் பரிசீலிக்கலாம். இந்தியாவில் இரு ஷோரூம்களை திறக்க உள்ளதாக அப்போது எச்டி குமாரசாமி தெரிவித்து இருந்தார்.

அந்த இரு ஷோரூம்களை தாண்டி, 3வது ஷோரூமையும் சமீபத்தில் பெங்களூருவில் டெஸ்லா திறந்துவிட்டது. அதாவது, அந்த அளவிற்கு இந்தியாவில் டெஸ்லாவின் வணிகம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், டெஸ்லா கார்கள் விற்பனை இந்தியாவில் இன்னமும் பெரிய அளவிற்கு எழுச்சி காணவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனை இன்னும் பெரிய அளவிற்கு எழுச்சி காணாதது டெஸ்லாவை மனதளவில் சோர்வடைய செய்யும் என்றாலும், இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்றால் இந்தியாவில் உற்பத்தி ஆலையை டெஸ்லா திறப்பதுதான் ஒரே வழி ஆகும். ஆனால், இந்தியாவை டெஸ்லா தனது பிராண்டிற்கான மார்க்கெட் ஆக கருதவில்லை என்பதுதான் இங்கு பிரச்சனையே. இருப்பினும், டெஸ்லாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் வதந்திகளை நம்ப வேண்டாம்.

Article Published On: Wednesday, May 20, 2026, 16:04 [IST]
English summary
Tesla has completely cancelled its manufacturing plans for india recent reports
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+