நம்ம சென்னைக்கு வராம அங்க போயிட்டாரே எலான் மஸ்க்! இந்தியாவில் ஐந்தாவது டெஸ்லா ஷோரூம்!

டெஸ்லா நிறுவனம் மும்பை, டெல்லி, குருக்கிராம், பெங்களூருவை தொடர்ந்து ஹைதராபாத்தில் தனது டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது. டெஸ்லாவின் 'எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டர்' என அழைக்கப்படும் இந்த டீலர்ஷிப் ஷோரூமின் மூலம் இந்தியாவில் டெஸ்லா ஷோரூம்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிரபலமான அமெரிக்க எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா மிகுந்த யோசனைகளுக்கு பின் கடந்த 2025ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் பார்த்தால், முழுவதுமாக இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில், இந்தியாவில் ஐந்தாவது ஷோரூமை டெஸ்லா திறந்துள்ளது.

tesla experience centre in hyderabad

ஒரு வருடத்திற்குள் ஐந்தாவது டீலர்ஷிப் ஷோரூமா என உங்களுக்கு சற்று ஆச்சிரியமாக இருக்கலாம். ஆனால், மற்ற வெளிநாட்டு கார் நிறுவனங்கள் உடன் ஒப்பிடுகையில் சற்று மெதுவாகவே டீலர்ஷிப் ஷோரூம்களை இந்தியாவில் டெஸ்லா திறந்து வருகிறது. கடைசியாக, பெங்களூருவில் டெஸ்லா எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டர் திறக்கப்பட்டது. அதுதான் தென்னிந்தியாவில் முதல் டெஸ்லா ஷோரூம் ஆகும்.

அதனை தொடர்ந்து, அடுத்ததாக தென்னிந்தியாவில் எங்கு டெஸ்லா ஷோரூம் திறக்கப்படும் என்பதில் சென்னை மற்றும் ஹைதராபாத்துக்கு இடையே எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஹைதராபாத்தில் ஷோரூமை டெஸ்லா திறந்துள்ளது. இது இந்தியாவில் டெஸ்லாவின் ஐந்தாவது டீலர்ஷிப் ஷோரூம் ஆகும். புதிய ஹைதராபாத் டெஸ்லா ஷோரூமில் மாடல் ஒய் மற்றும் சற்று விலைமிக்க மாடல் ஒய் எல் எலெக்ட்ரிக் கார்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

tesla experience centre in hyderabad

ஹைதராபாத்தின் HITEC சிட்டி பகுதியில் டெஸ்லா எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டர் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காரை வாங்கிய பின் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் பழுதுப் பார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சர்வீஸ் மையம் பொல்லாராம் தொழில்துறை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை விரைவாக சார்ஜ் செய்வதற்கான சூப்பர்சார்ஜர் எதுவும் ஹைதராபாத்தில் தற்போதைக்கு திறக்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே டெஸ்லாவின் சூப்பர்சார்ஜர்கள் தற்போதைக்கு மும்பையிலும், குருக்கிராம் பகுதியிலும் மட்டுமே உள்ளன. இவ்வாறு இந்திய சந்தையில் சற்று மெதுவாகவே டெஸ்லா செயல்படுவதற்கு காரணம், இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகள் ஆகும். மாடல் ஒய் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.50.89 லட்சமாகவும், இதன் லாங்-வீல்பேஸ் வெர்சனான மாடல் ஒய் எல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.61.99 லட்சமாகவும் உள்ளன.

இது மற்ற வெளிநாடுகளில் இந்த கார்களின் விலையை காட்டிலும் கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகமாகும். இதற்கு காரணம், இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அதன் கார்களை உற்பத்தி செய்யாதது ஆகும். மாறாக, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களையே இந்தியாவிற்கு கொண்டுவந்து டெஸ்லா விற்பனை செய்து வருகிறது.

மாடல் ஒய் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கும், மாடல் ஒய் எல் காரில் 681கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என்கிறது டெஸ்லா நிறுவனம். இந்த இரு கார்களும் கூபே-ஸ்டைலிலான SUV வகையை சேர்ந்த எலெக்ட்ரிக் கார்களாகும். இதில், மாடல் ஒய் எல் ஆனது கூடுதல் நீளமானதாக, ஆறு இருக்கைகள் உடன் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்தியாவில் மீண்டும் ஒரு புதிய டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் டெஸ்லா கார் கஸ்டமர்கள் அதிகமாகுவார்கள் என்றாலும், சூப்பர்சார்ஜர்கள் இன்னும் நாடு முழுவதும் பரவலாக கொண்டுவரப்படாதது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும். அதேபோல், நமது தமிழ்நாட்டில் இன்னும் ஒரு டெஸ்லா கார் ஷோரூம் கூட திறக்கப்படாதது நம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

Article Published On: Thursday, June 18, 2026, 15:16 [IST]
English summary
Tesla has opened fifth experience centre in india in hyderabad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out