பழைய பெட்ரோல்/ டீசல் காருக்கு கூடுதலா ரூ.3 லட்சம் ரொம்ப அதிகம்... டெஸ்லா ஒரு முடிவோட தான் இருக்கு!!

இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகனச் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில், பிரபல அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா (Tesla) தனது மாடல் ஒய் (Model Y) எலெக்ட்ரிக் காருக்கு கவர்ச்சிகரமான புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ், பழைய பெட்ரோல் அல்லது டீசல் காரை கொடுத்து மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான சிறப்புப் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus) வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்தத் தீவிரம் காட்டி வருகிறது.

tesla special exchange bonus

டெஸ்லா இந்தியாவில் எந்த உற்பத்தி ஆலையையும் நிறுவவில்லை; மாறாக, சீனாவில் இருந்து CBU (Completely Build Unit) எனப்படும் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்கிறது. 2025இல் சுமார் 200 மாடல்-ஒய் எலெக்ட்ரிக் கார்களை விற்ற நிலையில், பிரீமியம் எலெக்ட்ரிக் கார் பிரிவில் தனது சந்தையை விரிவாக்க டெஸ்லா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் ஒருபகுதியாகவே தற்போது எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.3 லட்சம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை 2026 மார்ச் 31 வரை செல்லுபடியாகும். இந்தச் சலுகைக் காலத்திற்குள், பழைய பெட்ரோல், டீசல் காரை கொடுத்து புதியதாக டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரை வாங்குபவர்களுக்கு பழைய காரின் மதிப்புடன் கூடுதலாக ரூ.3 லட்சம் வரையிலான போனஸ் வழங்கப்படும்.

tesla special exchange bonus

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கும் ஒரேயொரு டெஸ்லா காரான மாடல் ஒய், ரியர்-வீல்-டிரைவ் (RWD) கட்டமைப்பில் ஸ்டாண்டர்ட் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இதில், மாடல் ஒய் ரியர்-வீல்-டிரைவ் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.58.89 லட்சம் என்றும், லாங் ரேஞ்ச் ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.89 லட்சம் ஆகவும் உள்ளது.

மாநிலத்தை பொறுத்து காரின் ஆன்-ரோடு (On-road) விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரலாம். இதில் இருந்து, பழைய காரின் மதிப்பு கழிக்கப்படுவது மட்டுமின்றி, எக்ஸ்சேஞ்ச் போனஸும் கழிக்கப்பட்டால் காரின் விலை எந்த அளவிற்கு வரும் என்பதை அருகில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் ஷோரூமில் கேட்டறியவும்.

tesla special exchange bonus

ஆனால் தற்போதைக்கு இந்தியாவில், மும்பை, குருகிராம் மற்றும் டெல்லியில் மட்டுமே டெஸ்லா ஷோரூம்கள் உள்ளன. மிக விரைவில் பெங்களூருவில் ஒரு ஷோரூம் திறக்கப்பட உள்ளது. இருப்பினும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 12 சூப்பர்சார்ஜர்கள் மற்றும் 10 வழக்கமான சார்ஜிங் நிலையங்களையும் டெஸ்லா நிறுவியுள்ளது.

மாடல் ஒய் காரின் ஸ்டாண்டர்ட் RWD வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் வரை இயங்கும் திறன் கொண்டதுடன், 0-100 கி.மீ வேகத்தை 5.9 வினாடிகளில் எட்டிப்பிடிக்கக் கூடியதாக உள்ளது. லாங் ரேஞ்ச் RWD வேரியண்ட் 661 கி.மீ ரேஞ்சை வழங்கி, 0-100 கி.மீ வேகத்தை 5.6 வினாடிகளில் அடையக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூருவில் தான் முதல் டெஸ்லா ஷோரூம் வர போகிறது. சென்னைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும். ஆதலால், இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை பயன்படுத்திக் கொள்ள உங்களது பழைய காரை மும்பைக்கு கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கும். எப்படியிருந்தாலும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனுக்கான டெஸ்லாவின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு, இந்த ரூ.3 லட்சம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 4, 2026, 13:54 [IST]
English summary
Tesla india announced special exchange bonus for model y electric car check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X