4.5 நொடிகளில் 100 கி.மீ வேகம்... டெஸ்லா மாடல் Y L காருக்கு புதிய அப்டேட்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டெஸ்லா மாடல் Y L (Tesla Model Y L) மின்சார எஸ்யூவி காரின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த கார் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட 5 நொடிகள் தற்போது 4.5 நொடிகளாகக் குறைந்துள்ளது. இந்த மாற்றத்தால் காரின் விலை அல்லது ரேஞ்ச் போன்ற விஷயங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டெஸ்லா நிறுவனம் இந்த மேம்பாட்டை 'ஆக்சிலரேஷன் பூஸ்ட்' (Acceleration Boost) எனக் குறிப்பிடுகிறது. இந்த புதிய அப்டேட் கொடுக்கப்பட்டாலும், பழைய விலையான ரூ.61.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தொடர்ந்து கிடைக்கும். கடந்த 1ந் தேதி முதல் வாங்கப்படும் கார்களுக்கு இந்த செயல்திறன் அப்டேட் இடம்பெற்றிருக்கும் என்று டெஸ்லா கூறி உள்ளது.

Tesla Model YL

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல் Y L காரில் இரண்டு மின்மோட்டார்கள் மற்றும் ஆல் வீல் டிரைவ் (AWD) வசதி இடம்பெற்றுள்ளது. இதனால், நான்கு சக்கரங்களுக்கும் தேவைக்கேற்ப மின்சக்தியை வழங்க முடியும். தற்போது செய்யப்பட்டுள்ள அப்டேட் மூலம், இந்த கார் 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டும் எனக் கூறப்படுகிறது.

இந்திய மாடலின் அதிகாரப்பூர்வ மின்மோட்டார் சக்தி மற்றும் டார்க் விவரங்களை டெஸ்லா வெளியிடவில்லை. எனினும், இந்த கார் பேட்டரி மற்றும் மின் மோட்டார் மூலமாக 514 எச்பி பவரையும், 590 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 201 கிமீ வரை செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read

செயல்திறன் அதிகரிக்கப்பட்டாலும், மாடல் Y L காரின் ரேஞ்ச் எந்த மாற்றமும் இருக்காது. இது WLTP சோதனை முறையின்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 681 கி.மீ வரை பயணிக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், நடைமுறைப் பயன்பாட்டில் வேகம், போக்குவரத்து நெரிசல், வானிலை மற்றும் ஓட்டும் முறையைப் பொறுத்து பயண தூரம் மாறுபடும்.

இந்த காரில் 88kWh திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. இந்த பேட்டரி டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் அதிகபட்சம் 250 கிலோவாட் சார்ஜி ஏற்றும் திறனையும், ஏசி சார்ஜர் மூலம் 11 கிலோவாட் சார்ஜ் ஏற்றும் திறனையும் இது ஆதரிக்கிறது. இதற்கு உரிய டெஸ்லா சூப்பர்சார்ஜரில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 288 கிமீ பயணத்திற்குத் தேவையான சார்ஜைப் பெற முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது.

Also Read

இந்த காரில் 6 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கிறது. காரின் உட்புறத்தில் 16 அங்குல மைய தொடுதிரை, பின்புறப் பயணிகளுக்கான 8 அங்குலத் திரை, பனோரமிக் கண்ணாடி மேற்கூரை மற்றும் 19 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது வரிசை இருக்கைகளில் வெப்பமூட்டும் வசதி, குளிரூட்டும் வசதி மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஆர்ம்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் டேம்பிங் வசதியுடன் கூடிய அடாப்டிவ் சஸ்பென்ஷனும் இதில் இடம்பெற்றுள்ளது. டெஸ்லா கார்களுக்கு உரிய சிறந்த அம்சங்களுடன் இந்த புதிய அப்டேட் மூலமாக மேலும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

Article Published On: Wednesday, October 21, 2026, 13:09 [IST]
English summary
Tesla model y l acceleration boost india price range performance
மேலும்... #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out