நம்ம ஊரில் புக் செய்தவர்கள் டெலிவிரிக்கு பெங்களூரு தான் போகனும்! புதிய டெஸ்லா கார் சாலைக்கு வர துவங்கிடுச்சு!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் மாடல் Y L எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. 6 இருக்கைகளை கொண்ட எலெக்ட்ரிக் காரான இது SUV உடலமைப்பை கொண்டுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் நீண்ட கால தயக்கங்களுக்கு பிறகு கடந்த 2025ஆம் ஆண்டில் டெஸ்லா நுழைந்தது. முதல் எலெக்ட்ரிக் காராக மாடல் Y அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரையில் இந்த ஒரு டெஸ்லா கார் மாடல் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் மாடல் Y காரின் லாங்-வீல்பேஸ் வெர்சனாக மாடல் Y L அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது, மாடல் Y காரை விட மாடல் Y L கூடுதல் நீளமானது. அதற்கேற்ப இந்த காரில் 6 இருக்கைகள் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ப விலையும் அதிகம். பொதுவாகவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இப்படியொரு சூழலை சந்திக்க வேண்டிவரும் என்பதினாலேயே இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைய டெஸ்லா மிகவும் தயக்கம் காட்டியது.
டெஸ்லா எலெக்ட்ரிக் காரின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் அவை உற்பத்தி செய்யப்படாதது ஆகும். சீனாவில் உள்ள டெஸ்லா ஆலையில் உருவாக்கப்படும் மாடல் Y கார்கள் தான் இந்தியாவிற்கு முழு கார்களாக கொண்டுவரப்பட்டு, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மத்திய அரசு இறக்குமதி வரி விதிப்பதால், கார்களின் விலை அதிகமாக உள்ளது.

டெஸ்லாவின் விலை குறைவான காராக உலகளவில் மாடல் Y கருதப்படுகிறது. ஆனால், அதன் விலை இந்தியாவில் தற்சமயம் ரூ.50.89 லட்சமாக உள்ளது. இதன் லாங்-வீல்பேஸ் வெர்சனின் விலை மேலே கூறப்பட்டது போல் ரூ.61.99 லட்சம் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே; ஆன்-ரோடு விலைகள் இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.
டெஸ்லா மாடல் Y ஆனது ஓர் ரியர்-வீல்-டிரைவ் கார் ஆகும். அதாவது, எலெக்ட்ரிக் மோட்டார் வெளியிடும் ஆற்றல்கள் முதலாவதாக காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அதுவே, தற்போது இந்திய மக்களின் கைகளுக்கு கிடைக்க துவங்கியுள்ள மாடல் Y L ஆனது ஓர் ஆல்-வீல்-டிரைவ் கார் ஆகும்.
மாடல் Y எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், அதாவது பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் கார் அதிகப்பட்சமாக இயங்கும் தொலைவு 500கிமீ ஆகும். அதுவே, மாடல் Y L எலெக்ட்ரிக் காரில் 681கிமீ வரையில் ரேஞ்சை பெறலாம் என டெஸ்லா தெரிவிக்கிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த மாடல் Y L காரில் 6 பேர் அமர முடியும்.
மூன்று இருக்கை வரிசைகளில் ஒவ்வொரு வரிசையிலும் இரு இருக்கைகள் என ஆறு இருக்கைகள் வழங்கப்படுகின்றன. காரின் நீளம் அதிகரிக்கப்பட்டதால் மாடல் Y L காரினுள் நன்கு விசாலமான கேபினை பெறலாம். குறிப்பாக, இரண்டாவது வரிசையில் உள்ள இருக்கைகளில் மிகவும் சவுகரியமான பயணத்தை பெறலாம் என்கிறது டெஸ்லா நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய மாடல் Y L எலெக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் இந்த புதிய டெஸ்லா கார் சாலைக்குவர துவங்கியுள்ளது. இதனால், பெங்களூரு, சென்னை மாநகரங்களில் வசிப்பவர்கள் இன்னும் சில வாரங்களில் குறைந்தப்பட்சம் ஏதாவது ஒரு டெஸ்லா மாடல் Y L எலெக்ட்ரிக் காரை ஆவது சாலையில் காணலாம். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு டெஸ்லா ஷோரூம் கூட திறக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications