இந்தியாவில் ப்ரீமியமான வசதிகளுடன் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் நிறுவனம்

சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் அருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா (Tesla), கடந்த ஆண்டு இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக 'மாடல் Y' (Model Y) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெளியிட்டது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக விலையில் வெளியான இந்த எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களிடயே அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.

ஆண்டுக்கு 2,500 கார்கள் வரை விற்பனை செய்து கொள்வதற்கான கோட்டா டெஸ்லாவிற்கு இருக்கிறது. ஆனால், கடந்த 2025ல் வெறும் 225 கார்களையே விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். மேலே கூறியது போல அதிக விலையும், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெறாததுமே இதற்கு முக்கியக் காரணம். எனவே வாடிக்கையாளர்களுக்கு இந்த மாடலின் அம்சங்கள் தான் பிடிக்கவில்லை போல என சற்று வேறு விதமான அம்சங்கள் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய டெஸ்லா முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Tesla Model Y L

சீனாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் 'மாடல் Y L' (Model Y L) எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவிலும் களமிறக்க டெஸ்லா திட்டமிட்டிருக்கிறதாம். இது தற்போது விற்பனையில் இருக்கும் மாடல் Y எலெக்ட்ரிக் காரின் சற்று நீளமான வடிவமாகும். மாடல் Y காரில் இரண்டு வரிசையாக ஐந்து பேர் அமரும் வகையில் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் புதிய மாடல் Y L எலெக்ட்ரிக் காரில், மூன்று வரிசையாக ஆறு பேர் அமரும் வகையில் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு தான் இந்தப் புதிய மாடல் Y L எலெக்ட்ரிக் காரை சீனாவில் வெளியிட்டது டெஸ்லா. ஏப்ரல் 22ம் தேதின்று இந்தியாவில் இந்தக் காரை வெளியிட டெஸ்லா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அப்படியென்றால் அடுத்த இரண்டு நாட்களில் இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியாகவுள்ளது. மாடல் Y-யை விட சற்று நீளமான கார் என்பதால், இதனை விட விலையும் சற்று அதிமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tesla Model Y L 6 seater

ரியர் வீல் டிரைவ் கொண்ட மாடல் Y எலெக்ட்ரிக் காரானது இந்தியாவில் ரூ.59.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட மாடல் Y எலெக்ட்ரிக் காரானது ரூ.67.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிங்கிள் சார்ஜில் 622 கிமீ வரையிலான ரேஞ்சை இந்தக் கார் கொடுக்கும் என டெஸ்லா குறிப்பிட்டிருக்கிறது.

புதிதாக வெளியாகவிருக்கும் மாடல் Y L எலெக்ட்ரிக் காரானது 82 kWh பேட்டரி பேக்குடன், ஆல் வீல் டிரைவ் வசதியையும் கொண்டிருக்கிறது. 751 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சுடன் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் இந்திய மதிப்பிற்கு ரூ.46.18 லட்சம் என்ற விலையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.70 லட்சத்திற்கும் மேலான விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தற்போது விற்பனையில் இருக்கும் மாடல் Y எலெக்ட்ரிக் காரை சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்தே இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. புதிய மாடல் Y L எலெக்ட்ரிக் காரும் அங்கிருந்தே இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படாத மாடல் Y எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான தள்ளுபடியை டெஸ்லா வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் சிறப்பானவை மற்றும் மேம்பட்டவை தான் என்றாலும் தற்போது அது கொண்டிருக்கும் விலைப்பட்டியலுக்கு ஏற்றவை தானா என்பது கேள்விக்குறி தான். மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மிக அதிக விலையையே தற்போது விற்பனையில் இருக்கும் டெஸ்லா கார் கொண்டிருக்கிறது. வரப்போகும் புதிய கார் இந்தப் பிரச்சினையை எப்படி மாற்றும் எனத் தெரியவில்லை. டெஸ்லா என்ன செய்யவிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 20, 2026, 17:16 [IST]
English summary
Tesla model y l electric car to be launched in india check all details here
மேலும்... #tesla #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+