தாய் நாடான அமெரிக்காவை கண்டு கொள்ளாமல் இந்தியாவிற்காக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் செய்த காரியம்! சூப்பர்ல!
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா (Tesla) நிறுவனம், கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. தற்போதைய நிலையில் ஒரே ஒரே எலெக்ட்ரிக் காரை (Electric Car) மட்டுமே டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அது டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) ஆகும்.
இதில், மொத்தம் 2 வேரியண்ட்கள் (Variants) விற்பனையில் உள்ளன. அவை ரியர் வீல் டிரைவ் வெர்ஷன் மற்றும் ரியர் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் வெர்ஷன் ஆகியவை ஆகும். இதில், ரியர் வீல் டிரைவ் வெர்ஷனின் விலை சுமார் 60 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ரியர் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் வெர்ஷனின் விலை 68 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இந்த சூழலில், இவை இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய வேரியண்ட் ஒன்றை டெஸ்லா நிறுவனம் இன்று (ஏப்ரல் 22) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அது எல் (L) வேரியண்ட் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டெஸ்லா மாடல் ஒய் எல் (Tesla Model Y L) இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு டெஸ்லா மாடல் ஒய் எல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 61.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா மாடல் ஒய் காரின் ரியர் வீல் டிரைவ் வெர்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 500 கிலோ மீட்டர்களாக உள்ளது.

அதே நேரத்தில் ரியர் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் வெர்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 661 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. ஆனால் புதிய எல் வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் இவை எல்லாவற்றையும் விட அதிகம் ஆகும். டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி பார்த்தால், அதன் டிரைவிங் ரேஞ்ச் 681 கிலோ மீட்டர்களாக உள்ளது. டிரைவிங் ரேஞ்ச் போலவே இதன் ஆக்ஸலரேஷனும் சற்று அதிகம்.
அதாவது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை கடக்க ரியர் வீல் டிரைவ் வெர்ஷன் 5.9 வினாடிகளை எடுத்து கொள்ளும். அதே நேரத்தில் ரியர் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் வெர்ஷன் இதை செய்ய 5.6 வினாடிகளை எடுத்து கொள்ளும். ஆனால் புதிய எல் வேரியண்ட் வெறும் 5.0 வினாடிகளிலேயே இதை செய்து விடும்.
ஏனெனில் மற்ற 2 வெர்ஷன்களும், ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டவை ஆகும். ஆனால் புதிய எல் வேரியண்ட், ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது. எனவேதான் அதன் ஆக்ஸலரேஷன் மிகவும் சிறப்பாக உள்ளது. இருப்பினும் இந்த 3 வேரியண்ட்களின் டாப் ஸ்பீடும் மணிக்கு 201 கிலோ மீட்டர்களாகதான் இருக்கிறது.
இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். புதிய எல் வேரியண்ட், லாங் வீல் பேஸ் வெர்ஷன் ஆகும். எனவே கேபினில் பயணிகளுக்கு நல்ல இடவசதி கிடைக்கும். அத்துடன் இது 6 இருக்கைகளை கொண்ட மாடல் ஆகும். எனவே இதன் 2வது வரிசையில் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சர்வதேச சந்தைகளை விட, இந்தியாவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம். ஏனெனில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதில்லை. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.
அத்தகைய கார்களுக்கு இந்திய அரசு மிக கடுமையான இறக்குமதி வரியை விதித்து கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சர்வதேச சந்தைகளை காட்டிலும் இந்தியாவில் டெஸ்லா கார்களின் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் டெஸ்லா கார்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை.
கடந்த 2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 342 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இருப்பினும் புதிய மாடல்களை தொடர்ந்து விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம், இந்திய சந்தை மீது டெஸ்லா நிறுவனத்திற்கு இருக்கும் ஆர்வம் மற்றும் நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார்களை தயாரித்தால், அதன் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்படும்பட்சத்தில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு இறக்குமதி வரி குறைந்து, விலை குறையும். இதன் காரணமாக அதன் விற்பனையும் உயரும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இங்கே மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எலான் மஸ்க் (Elon Musk) தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் டெஸ்லா நிறுவனம், அதன் தாய் நாடான அமெரிக்காவிலேயே டெஸ்லா மாடல் ஒய் எல் எலெக்ட்ரிக் காரை இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.. அதற்கு முன்பாகவே இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.


Click it and Unblock the Notifications








