பறந்து சாகசம் செய்த டெஸ்லா ரோட்ஸ்டர்... ராக்கெட் வேகத்தில் மிரட்டல்!

எலக்ட்ரிக் வாகனத் துறையில் தனது அதிரடியான புதுமைகளால் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா நிறுவனம், தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரோட்ஸ்டர் காரின் தயாரிப்பு வடிவத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார், வழக்கமான கார்களைப் போல சாலைகளில் செல்வதுடன், சில விநாடிகள் காற்றில் பறக்கும் அளவுக்கு மிரட்டலான திறனைக் கொண்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரில் சில வினாடிகள் பறக்கும் வகையில், வாயு மூலமாக உந்துவிசை பெறும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. விண்கலங்கள் மற்றும் ராக்கெட்டுகளின் திசையை மாற்றவும், வேகத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படும் இதே தொழில்நுட்பம் இப்போது இந்த காரின் பின்பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Tesla Roadster

இதன் காரணமாக, இந்த கார் வெறும் 0.81 வினாடிகளுக்குள் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் அசுரத்தனமான ஆற்றலைப் பெற்றுள்ளது. நெடுஞ்சாலைகளில் மின்னல் வேக முடுக்கத்தை விரும்புவோருக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மேலும், முழுமையான எரிபொருள் நிரப்பினால் 1,000 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் தரைவழி பயணத்துடன் நின்றுவிடாமல், பிரத்யேக சூழல்களில் ராக்கெட் த்ரஸ்டர்களின் உதவியுடன் கார் காற்றில் சில வினாடிகள் பறந்து செல்வதற்கும், ஸ்டண்ட் போன்ற சாகசங்களைச் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுச் சாலைகளில் பயன்படுத்துவதற்கு இது அனுமதிக்கப்படாது. வாகனப் பிரியர்கள் மத்தியில் இந்த பறக்கும் மற்றும் ஸ்டண்ட் செய்யும் திறனுடன் கூடிய இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான எலக்ட்ரிக் கார்களை விட இதன் பேட்டரி மற்றும் மோட்டார் அமைப்புகள் முற்றிலும் மாறுபட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தூர பயணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில், ஒரே சார்ஜில் மிக நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய திறன் இதில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிவேகமாக செல்லும் போது காரின் நிலைத்தன்மையை உறுதி செய்ய ஏரோடைனமிக் வடிவமைப்பு மற்றும் பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த ராக்கெட் வேரியண்ட் டெஸ்லா ரோட்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. வரும் 2028ம் ஆண்டு இந்த கார் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கும். கடந்த 2017ம் ஆண்டு கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது புதிய தலைமுறை மாடலாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Tesla Roadster

பறக்கும் திறன் இல்லாத சாதாரண வகை வேரியண்ட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விற்பனைக்கு கிடைக்கும். த்ரஸ்ட்டர்களுடன் கூடிய பறக்கும் மாடலானது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

உலகளாவிய சந்தைகளில் இதன் முன்பதிவுகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய சந்தைக்கு இந்த ஹைப்பர் கார் எப்போது வரும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நவீன தொழில்நுட்பங்களை விரும்புவோரின் கனவு வாகனமாக இந்த ரோட்ஸ்டர் உருவெடுத்துள்ளது.

எல்லோரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த காரின் அறிமுகத்தை வித்தியாசமான முறையில் டெஸ்லா செய்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த பறக்கும் கார் குறித்த கமென்ட்டுகளும், மீம்ஸ்களும் சூடுபறக்கின்றன.

Article Published On: Friday, October 16, 2026, 9:56 [IST]
English summary
Tesla roadster flying car spacex thruster technology revealed
மேலும்... #tesla #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out